Hon’ble EB Minister Press Release & Review Meeting at Maraimalar Nagar

நேற்று  (20.05.2023) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர், மாநில ஊரக வளர்ச்சி
பயிற்சி நிலையத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்
துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையிலும், மாண்புமிகு
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி
செந்தில்பாலாஜி அவர்கள் முன்னிலையிலும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம்
மாவட்டங்களில் சீரான மின் விநியோகம் வழங்க மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி
பிரதிநிதிகள் மின்சார வாரிய அலுவலர்களுடன் நடைபெற்ற சிறப்பு ஆய்வுக்
கூட்டத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுவினை
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பெற்றுக்கொண்டனர். உடன் மின் உற்பத்தி
மற்றும் மின் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., இயக்குநர்/பகிர்மானம் திரு.மா.சிவலிங்கராஜன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.