Category: Tamil News

 • மத்திய அமைச்சராகும் ஓபிஎஸ் மகன், இன்னொரு மந்திரி யார்?

  அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் குமார் அதிமுக பாஜக கூட்டணியின் ஒரே வெற்றி வேட்பாளராக தேனியிலிருந்து ஜெயித்திருக்கும் நிலையில், அவர் மத்திய அமைச்சராவார் என அடித்து சொல்கிறார்கள் அதிமுகவினர். “தமிழ்கத்துக்கு எப்படியும் மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் கொடுத்து தான் ஆக வேண்டும். சென்ற முறை பொன்னார் வென்றது போல, இந்த தடவை ரவீந்திரநாத் குமார் வென்றுள்ளார். எனவே, அவர் மத்திய அமைச்சர் ஆவது உறுதி,” என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இது தொடர்பாக ஏற்கனவே, ஓபிஎஸ்… Continue reading "மத்திய அமைச்சராகும் ஓபிஎஸ் மகன், இன்னொரு மந்திரி யார்?"

 • அனைத்திலும் அரசியல் செய்யும் பா ரஞ்சித், கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

  ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக குரல் கொடுக்கிறேன் என்னும் பெயரில், சர்ச்சைகளை கிளப்ப அரசியலில் பலர் உள்ள நிலையில், திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்தும் அந்த வரிசையில் சேர்ந்து விடுவார் போல. ஏற்கனவே கபாலி மற்றும் காலாவில் தேவையில்லாத சர்ச்சைகளை கிளறிவிட்டதாக ரஜினி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த ரஞ்சித், நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடும் இழுபறியை சந்தித்த போது, விசிகவினரே விசனப்படும் அளவுக்கு ட்வீட்டினார். “ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது… Continue reading "அனைத்திலும் அரசியல் செய்யும் பா ரஞ்சித், கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்"

 • மத்திய மந்திரி கனவில் இருக்கும் தமிழக புள்ளிகள் யார், யார்?

  எக்சிட் போல் கருத்து கணிப்புகள் மத்தியில் பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வருமென்றும், தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என்றும் கூறியுள்ளதால், அதிமுக, திமுக என இரு கூடாரங்களுமே மகிழ்ச்சியில் உள்ளன. பாஜக பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணியினருக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கும் வழக்கம் உள்ள கட்சி என்பதால், அதிமுகவில் சில பேர் மத்திய மந்திரியாகும் கனவில் உள்ளனர். அவர்களில், தற்போதைய பாராளுமன்றத்தில் உயர் பதவியில் உள்ளவரும், வாரிசு அரசியல்வாதியும், மூத்த தலைவரும் அடக்கம். திமுகவிலோ, மந்திரி ஆசையில் மிதப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். முன்னாள்… Continue reading "மத்திய மந்திரி கனவில் இருக்கும் தமிழக புள்ளிகள் யார், யார்?"

 • காஜலின் கவர்ச்சி, சக நடிகைகள் அதிர்ச்சி

  கமர்ஷியல் படங்கள் மட்டுமே செய்ய விரும்பவில்லை என்று கூறிய கையோடு, கவர்ச்சி கடலில் அதிரடியாக குதித்துள்ளார் காஜல் அகர்வால். அவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படங்கள் ரசிகர்களை பரவசப்படுத்தினாலும், சக நடிகைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். காஜலின் போட்டியை எப்படி சமாளிப்பது என்று தங்களின் மேனேஜர்களிடம் தீவிர ஆலோசனையில் ஒரு சில நடிகைகள் ஈடுபட்டிருப்பதாக தகவல் தெரிய வருகிறது. பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள சீதா என்ற தெலுங்கு படம் விரைவில்… Continue reading "காஜலின் கவர்ச்சி, சக நடிகைகள் அதிர்ச்சி"

 • விருந்தில் மோடி தடவிய மருந்து: உற்சாகத்தில் எடப்பாடி

  டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற விருந்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தேசிய‌ தலைவர் அமித்ஷாவும் காட்டிய அன்பில் மெய்சிலிர்த்து போய் உள்ளது அதிமுக கூட்டணி டீம். நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் நேற்று விருந்தளித்தார். இதில் முதல்வர்… Continue reading "விருந்தில் மோடி தடவிய மருந்து: உற்சாகத்தில் எடப்பாடி"

 • முன்னாள் காதலி பற்றி பேசி சிக்கலில் சிக்கிய நடிகர்

  விவேக் ஓபராய் ஐஸ்வர்யா ராய் குறித்து பதிவிட்ட ட்விட், பலத்த சர்ச்சையானதை தொடர்ந்து அதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கமும் அவர் அளித்துள்ளார். இதற்கு பின்னணியில் ஐஸ்வர்யா ராயை அவர் பழி வாங்கும் நோக்கமே இருந்தது என பலரும் வசைபாடி வருகின்றனர். ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய், 42. தமிழில், விவேகம் என்ற படத்தில் நடித்து உள்ளார். மேலும், 24ம் தேதி வெளியாக உள்ள, ‘பி.எம்., நரேந்திர மோடி’ என்ற படத்தில், பிரதமர் மோடியாக, விவேக் ஓபராய்நடித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுவருகின்றன. இதில்… Continue reading "முன்னாள் காதலி பற்றி பேசி சிக்கலில் சிக்கிய நடிகர்"

 • சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் தவிக்கும் இரு தமிழக தலைவர்கள்

  எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் முடிவுகளால் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், திமுக தலைவர் மு க ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும். பெரும்பாலான டிவி சேனல்களின் எக்ஸிட் போல்கள், தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரசை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறும். ஆனால், மத்தியில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்றும் கூறுகின்றன. இதனால், ஸ்டாலின், எடப்பாடி இருவருமே அப்செட்டாம். அதுவும், ஸ்டாலின் கொஞ்சம் அதிகமாகவே விசனப்படுகிறாராம். ஜெயித்தும் பயன் இல்லாமல்… Continue reading "சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் தவிக்கும் இரு தமிழக தலைவர்கள்"

 • அட்ஜஸ்ட் செய்ய மறுக்கும் நடிகை, ஹீரோக்களுடன் நடிக்கவே தயங்குகிறாராம்

  வசதியான சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்துள்ள கீர்த்தி சுரேஷ், மற்ற நடிகைகள் போல வளைந்து கொடுக்க மாட்டேன் என்கிறாராம். அதுவும், நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு, தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு மட்டுமே ஓகே சொல்கிறாராம். அதுமட்டுமில்லாமல், பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் தேவையில்லாதா விஷயங்களில் எல்லாம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பதால், அந்த மாதிரி படங்களை தவிர்க்கிறாராம். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயக்குகிறார் என்கிறார்கள். ஆனால், கீர்த்தி தரப்போ இதையெல்லாம் மறுக்கிறது.… Continue reading "அட்ஜஸ்ட் செய்ய மறுக்கும் நடிகை, ஹீரோக்களுடன் நடிக்கவே தயங்குகிறாராம்"

 • இன்னொரு செருப்பிற்காக காத்திருக்கிறேன் – கமல்ஹாசன்

  பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய இந்த விழாவில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தும்… Continue reading "இன்னொரு செருப்பிற்காக காத்திருக்கிறேன் – கமல்ஹாசன்"

 • பிக் பாஸ் 3: யாரெல்லாம் உள்ளே? உற்சாகப்படுத்தும் லிஸ்ட்

  பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவாக ‘பிக் பாஸ்’ திகழ்கிறது. தற்போது இந்த ஷோவின் மூன்றாம் பாகம் ஆரம்பிக்கவிருக்கிறது. கமல்ஹாசனின் புரோமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், மூன்றாவது சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்களை உறுதி செய்திருப்பதாக தெரிகிறது. அதன் படி, பிரசன்னா, ஜாங்கிரி மதுமிதா, பவர் ஸ்டார் சீனிவாசன், சஞ்சனா சிங், ஆல்யா மானசா, ரச்சிதா மகாலட்சுமி… Continue reading "பிக் பாஸ் 3: யாரெல்லாம் உள்ளே? உற்சாகப்படுத்தும் லிஸ்ட்"