ரூ 2.90 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த  தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய ஏர் இந்தியா விமானம் ஏஐ 906 சோதனையிடப்பட்டது.

சோதனையின் போது, இருக்கை ஒன்றின் மெத்தைக்கு கீழே, வெண்ணிற டேப்  கொண்டு ஒட்டப்பட்ட இரண்டு பெரிய பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  அவற்றை திறந்து பார்த்தபோது மொத்தம் ஆறு கிலோ எடையுடைய தங்கம்  (தலா ஒரு கிலோ கட்டிகள்) இருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 2.90 கோடியாகும்.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று செய்தி குறிப்பு  ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

(வெளியீட்டு அடையாள எண்: 1712418)