” Xtreme ” எக்ஸ்டிரீம் ” பெண்களுக்கான படம் ( பாடம் ) இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது.

முழுக்க முழுக்க பெண்களுக்கான படம் ” Xtreme ” எக்ஸ்டிரீம் ” பிக்பாஸ் பிரபலம் ரக்ஷிதா மஹாலஷ்மி மற்றும் அயலி பிரபலம் அபி நட்சத்ரா நடித்துள்ளனர்.

ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் ” Xtreme ” எக்ஸ்டிரீம் “

” Xtreme ” எக்ஸ்டிரீம் ” பெண்களுக்கான படம் ( பாடம் ) இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது.

SIEGER PICTURES என்ற பட நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார். N ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாக உருவாக்கி இருக்கும் படத்திற்கு ” Extreme ” ( எக்ஸ்டிரீம் ) என்று ஹாலிவுட் தரத்தில் பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் 6 வது சீசன் மூலம் பிரபலமான ரக்ஷிதா மஹாலஷ்மி மற்றும் சமீபத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அயலி படத்தின் மூலம் பிரபலமான அபி நட்சத்ரா, நேரம் படத்தை தொடர்ந்து ரெஜினா படங்கள் உட்பட சிறந்த படைப்புகளில் நடித்துவரும் ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மற்றும் இவர்களுடன் அம்ரிதா ஷெல்டர், படத்தின் தயாரிப்பாளர் ராஜ்குமார், சிவம் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : D.J. பாலா
சந்தானம் நடித்த பிஸ்கோத், காசேதான் கடவுளடா போன்ற படங்களுக்கு இசையமைத்த ராஜ் பிரதாப் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

சாமானியன் படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் கோபி இந்த படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார்.

டம்ளர் குத்து மற்றும் ஹிப்ஹாப் ஆதி நடித்த ஆகிய படங்களுக்கு நடனம் அமைத்த ராக் சங்கர் நடனம் அமைக்கிறார்.
சண்டை பயிற்சியை சிவம் மேற்கொள்கிறார்.
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
தயாரிப்பு நிறுவனம் : SIEGER PICTURES
தயாரிப்பாளர்கள் : கமலகுமாரி, ராஜ்குமார்.N
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ராஜவேல் கிருஷ்ணா.
இவரது முதல் படமான ” பிழை “சென்னை திடைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான ” தூவல்” உலகம் முழுவதும் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சிறந்த படமாக சுமார் 40 விருதுகளுக்கு மேல் வென்றது குறிப்பிடத்தக்கது.
அந்த படம் கடந்த 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்டது.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

இது ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம்.

Xtreme என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம்.
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை.
Human அப்படின்றதே சுய கட்டுப்பாட்டோடு இருப்பதுதான்.
அதை மீறும்போது மிருகமாக மாறிவிடுகிறோம்.
சுய கட்டுப்பாட்டோட இருக்கிறவங்களையும், சில பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் பண்ற சில சம்பவங்களால் பாதிக்கப்படுவதும் ஒரு பெண்தான், அதற்கு தீர்வு சொல்லுவதும் ஒரு பெண்தான் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறோம்.

இந்த கருத்து பெண்களுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி நிறைய பேர் நடிக்க மறுத்து விட்டனர்.

ஆனால் பெண் குழந்தைகளை பெற்ற எல்லா பெற்றோர்களும் கண்டிப்பா Accept பண்ணுவாங்க அப்படியொரு முக்கியமான கருத்தை அனைவருக்கும் சொல்லவிருக்கிறோம் படம் இமாதம் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்றார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.

Pro.Bhuvan Selvaraj