World Premiere of Director Ram’s Paranthu Po (Fly Away) at the 54th International Film Festival Rotterdam
The world premiere of Director Ram’s highly anticipated film, Paranthu Po (Fly Away), produced by Disney+ Hotstar, took place yesterday at the prestigious 54th International Film Festival Rotterdam. Despite the freezing temperatures in Rotterdam, the screening drew a packed and enthusiastic audience, reflecting the widespread anticipation for the film.
Actor Shiva, Director Ram, Pradeep Milroy(Head of Content, Tamil at Disney+ Hotstar), Child artist Mitul Ryan, and Music Composer Santhosh Dhayanidhi received a celebratory response from a diverse audience praising the film for its perfect blend of comedy and heartwarming storytelling.
During the post-screening Q&A, Director Ram shared exciting news, confirming that Paranthu Po (Fly Away) will have a worldwide theatrical release this summer. He expressed his confidence that the film will bring the same level of joy and celebration to audiences in theatres as it did during its premiere, generating even more excitement among fans worldwide.
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்.
‘பறந்து போ’ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி இருந்தது. ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் அரங்கம் நிரம்பியது, மேலும் திரைப்படத்தின் இறுதியில் எழுந்த அரங்கம் அதிர்ந்த கைதட்டல்கள் பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததை உறுதிபடுத்தியது.
இத்திரையிடலை இயக்குநர் ராமுடன், நடிகர் சிவா, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
‘பறந்து போ’ திரைப்படம் கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் இத்திரையிடலில் இருந்தது போல திரையரங்குகளில் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் எனவும் இயக்குநர் ராம் கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
ஒட்டுமொத்தத் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் தந்த தருணமாக ‘பறந்து போ’ திரைப்படத்தின் சர்வதேசத் திரையிடல் நிகழ்ச்சி அமைந்தது.