Winners

“Nan Kadavul” Rajendran has been awarded Best Supporting artist at “Cafe Irani Chaii international Film Festival 2021” for his excellent acting in our film “Thakavi”.

நடிகர் ‘ நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு சிறப்பான குணசித்திர நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. ” இரானி சாய் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட “தகவி” திரைப்படத்தில் நடித்துள்ள நான்கடவுள் ராஜேந்திரன் விருதுக்கு தேர்வாகி உள்ளார் என்ற செய்தி கிடைத்த உடன் படக்குழுவினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
படத்தொகுப்பை கவனித்து சந்தோஷ் குமார் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் கதை வசனத்தை சக்திவேல் எழுதி உள்ளார். கவிஞர் பிறைசூடனின் மகன் தயாபிறைசூடன் இசையமைத்துள்ளார். எஸ். நவீன்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில்  சிங்கம்புலி, வையாபுரி, அஜய் ரத்தினம் ஆகியோரும் நடித்துள்ளனர்.” தகவி”  திரைப்படம்
குழந்தைகளுக்கான படமாக உருவாகி உள்ளது .