விஷாலின் #லத்தி பட கோலோகல விழா !

லத்தி படத்தின் டீஸரைப் பார்த்தால் விஷால் திரைக்கு வெளியே வந்து அடித்து விடுவார் போல இருக்கிறது; நிறைய அடிபட்டு நடித்திருக்கிறார்! – உதயநிதி ஸ்டாலின்

லத்தி படத்தின் டீஸரைப் பார்த்தால் விஷால் திரைக்கு வெளியே வந்து அடித்து விடுவார் போல இருக்கிறது; நிறைய அடிபட்டு நடித்திருக்கிறார்! – உதயநிதி ஸ்டாலின்

வரலாற்று படைக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் ஐயா மற்றும் ஸ்டாலின் ஐயா பெயரும் இடம்பெற வேண்டும் – உதயநிதியிடம் விஷால் கோரிக்கை

இப்படத்தின் டீஸர் வெளியானதும் பார்க்கிறேன்; எனக்கும், விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய் – நடிகை சுனைனா

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது :

நடிகர் விஷால் பேசும்போது,

லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்த படத்தில் அடி வாங்காத ஆள் இல்லை. டீஸரில் ‘ஊர்ல இருக்க பொறுக்கி பொறம்போக்கு எல்லாம் என்னை போட்டு தள்ள தாண்டா தேதி குறிச்சீங்க.. இப்ப எவனும் தப்பிக்க முடியாது வாங்கடா’ என்உ படத்தில் நான் பேசும் இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நடிகர் மனோபாலா பேசும்போது

இந்த யூனிபார்மை நான் கிட்டதட்ட 400 படங்களுக்கு மேல் உடுத்தியுள்ளேன். அதிகம் உடுத்தியது நான் தான் என்றார்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், அஜித் குமார், விஜய், பிரபு, சூர்யா, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்கள் காவல்துறை அதிகாரிகளாக நடித்த படங்களில் இருந்து சில காட்சிகள் போடப்பட்டது.

விஷாலிடம் யுவனை பற்றி கேட்டபோது,

நாங்கள் கிட்ட தட்ட 18 வருடங்கள் நண்பர்களாக இருக்கிறோம். என்னை பட்டி தொட்டி எங்கும் சேர வைத்தது யுவன் தான். என் முதல் படத்திற்கு யுவன் தான் இசையமைத்தார். தாவணி போட்ட பாடல் பட்டிதொட்டி எல்லாம் என்னை கொண்டு சேர்த்தது. அவர் பின்னணி இசையை சிறப்பாக அமைப்பார். அவர் சும்மா கம்போஸ் பண்ணும்போதே நான் ரெக்கார்ட் செய்துவிடுவேன். அவரின் கை விளையாடும். அவர் எங்கிருந்தாலும் அவரின் கான்சர்ட்க்கு வாழ்த்துக்கள். அவருடன் பழகிய பாக்கியம் தான் துப்பறிவாளன் 2 படத்தில் அவரின் தந்தை “இசைஞானி இளையராஜா” இசையமைக்கிறார். யுவனுடைய பாடல்களும், ராஜா சாரின் பாடல்களும் நான் உட்பட தினம் தினம் கேட்காத ஆட்களே இல்லை. அந்த அளவிற்கு அவர்கள் நம் ரத்தத்தில் ஊறிவிட்டார்கள்.

நீண்ட நேரம் பயணம் என்றால் ராஜா சார் தான். இதை யுவனிடமே கூறியிருக்கிறேன்.

அடுத்ததாக யுவன்-விஷால் இருவரின் பயணத்தை காணொளியாக காட்சியிடபட்டது.

ரமணா – நந்தா – விஷால் மூவரின் பயணத்தையும் காணொளியாக காட்சியிடப்பட்டது.

தயாரிப்பாளர்கள் ரமணா – நந்தா பேசியபோது,

நந்தா,
நம்பிக்கை தான் எங்கள் மூவரையும் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறது. அது தான் இந்த படத்திற்கும் எங்கள் நட்பிற்கும் காரணம். பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து கொண்டிருக்கிறார். இந்த விழாவில் பூங்கொத்து பொன்னாடைக்கு ஆகும் செலவை 5 பெண் குழந்தைகளின் கல்வி செலவிற்கு கொடுக்கிறோம் என்று கூறி 5 பெண் குழந்தைகளுக்கு காசோலை வழங்கினர்கள்.

ரமணா –
இவ்விழாவிற்கு அழைத்தவுடன் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. நடிகர்களாகிய நாங்கள் தயாரிப்பாளராக மாறியதாற்கு விஷால் தான் காரணம். ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் சொன்னதன் பேரில் நந்தா தான் முதலில் கதை கேட்டார். பின் நான் கேட்டேன். அதன் பிறகு விஷால் கேட்டார். வழக்கமாக விஷால் ஏதேனும் கதை பிடிக்கவில்லை என்றால் 2 மணி நேரம் வீணாகியதற்கு விஷால் எங்களை வீட்டிற்கு அழைத்து அடிப்பார். ஆனால், இந்த படத்திற்கு ஒரு நாள் கழித்து இந்த படம் தான் நான் அடுத்து நடிக்க போகிறேன். அதை நீங்கள் தயாரிக்க வேண்டுமென்றார். இந்த படத்தின் முதல் காட்சியில் இருந்தே 8 வயது பையனுக்கு தந்தையாக நடிக்கிறார். ஆகையால், ஒரு நாள் அவகாசம் எடுத்து இப்படத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அது எங்கள் ஆசையும் கூட. அதை விஷாலே சொல்லி செய்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்றார்.

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது,

லத்தி சார்ஜ் படக்குழுவினர் அனைவர்க்கும் நன்றி. நான் நீண்ட காலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இருவரும் சுலபமாக கால்ஷீட் வாங்கி விட்டீர்கள். சரியோ தவறோ நாங்கள் இதுவரை நட்பாக இருக்கிறோம்.
நானும் விஷாலும் சேர்ந்து படம் பண்ண வேண்டியது. ஆனால், இது வரை நடக்கவில்லை. நானும் விஷாலும் பள்ளிக்கு ஒன்றாக சென்றோம்.. கல்லூரிக்கு ஒன்றாக சென்றோம்.. அவ்வளவுதான் .. அதற்கு மேல் சொல்ல முடியாது.

விஷால் இதற்கு முன்னதாக அசிஸ்டன்ட் கமிஷனர், கமிஷனர் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து தற்போது ப்ரோமோஷனில் கான்ஸ்டபிள் ஆகியுள்ளான்.

நான் சமீபத்தில் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் சண்டை, பாட்டு என ஏதும் இருக்காது. நான் தேர்வு செய்யும் கதையில் சண்டை இருக்காது. ஆனல் விஷால் அதற்கு நேர்மாறாக இருப்பான்.

இந்த படத்தில் நடிக்கும் போது விஷாலுக்கு நிறைய அடிபட்டது என கேள்விப்பட்டேன். இவ்வளவு மெனக்கெடலுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை பார்த்தல் விஷால் திரையை விட்டு வெளியே வந்து அடித்து விடுவார் போல காட்சிகள் இருக்கிறது. அவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள். அதே போல் நடிகர் சங்கம் கட்டிடத்தை விரைவில் கட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். விஷால் அதை வைத்து தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

பாலு சார் என்னுடைய ஒளிப்பதிவாளர். அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு நடிகருடன் வேலை செய்தால் அவருடனே தான் சிறு காலம் பயணிப்பார். விஷாலுடன் இது அவருக்கு நான்காவது படம். சுனைனா ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் ‘நீர் பறவை’ என்ற படத்தில் நடித்திருந்தார்கள். அவருக்கும் வாழ்த்துக்கள்.

உதய் – விஷால் இருவரிடமும்  பள்ளி பருவத்தை பற்றி கேட்டபோது,

முதலில், எங்கிருந்தாலும் என்ன வேலையில் இருந்தாலும் ஒரு பத்து நிமிடம் எனக்காக ஒதுக்கி லத்தி படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதன் பேரில் வந்த உதயநிதிக்கு நன்றி.

பள்ளியில் யோசிக்கமால் பொய் சொல்வது நான் தான் என்றார் உதய். ஒவ்வொரு கல்லூரிக்கும் சைட் அடிப்பதற்காக பள்ளி விழாவின் அழைப்பிதழ் கொடுக்க நாங்களே செல்வோம் என்றார் விஷால்.

மேலும், வரலாற்று படைக்கும் நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் ஐயா மற்றும் ஸ்டாலின் ஐயா பெயரும் இடம்பெற வேண்டும் என்று உதயநிதியிடம் விஷால் தன் ஆசையெய் தெரிவித்தார்.

இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியபோது,

லத்தி படத்தின் தெலுங்கு டீசரை நான் வெளியிட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் நிச்சயம் வெற்றியடையும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்ல, பீகார் வரைக்கும் மாஸ் ஹீரோவாக விஷால் தான் இருக்கிறார்.

இந்த துறையில் எனக்கு ஒரு சகோதரர் கிடைத்திருக்கிறார். மார்க் ஆண்டணி படத்தில் அவருடன் நடிக்கிறேன். விஷால் மிக மிக நல்ல மனிதர். இப்படி ஒரு பிள்ளையை அவர் அம்மா பெற்றிருக்கிறார். திரையில் மட்டுமில்லாது திரைக்கு வெளியேயும் எல்லோருக்கும் உதவக் கூடிய மனிதர்.

பீட்டர் ஹெயின்,
‘சும்மாவே வெடி வெடிப்பான்.. தீபாவளி கிடைத்தால் விடுவானா’ என்று கூறுவது போல, விஷாலே கிடைத்திருக்கிறார் என்று அவரை உருண்டு புரள வைத்து சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

ரமணா – நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். நிச்சயம் இந்த படம் வெற்றிபெறும். இந்த படத்தின் கதையை இயக்குனர் மிக சிரமப்பட்டு இயக்குகிறார் என்றார்.

மார்க் ஆண்டனி படத்தில் நாங்கள்  இணைந்துள்ளோம். லத்தி ஹிட் என்றால். மார்க் ஆண்டனி சூப்பர் டூப்பர் ஹிட். விஷால் மிக நல்ல உள்ளம் கொண்டவர். இப்படிப்பட்ட ஒருவரை பெற்றெடுத்ததற்கு பெற்றோர் இருவருக்கும் நன்றி. அந்த அளவிற்கு அவர் பலருக்கு நன்மை செய்துள்ளர்.

விஷாலுக்கு இந்த படத்தின் மூலம் அவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குகிறது என்றார்.

இடையில் விஷால் பேசும்போது,

எஸ்.ஜெ.சூர்யா அவர்களுக்கு தெரியாது. நான் லயோலா கல்லூரியில் படிக்கும் போது இவர் ஹாஸ்டலில் தங்கியிருப்பார். அப்போதிலிருந்தே அவருக்குள் இருந்த உற்சாகம் இதுவரை குறையவில்லை. அது தான் அவரின் வெற்றிக்கு காரணம்.

நான் கேர்ள் ஃபிரண்ட் உடன் நேரம் செலவழிப்பதை விட. எஸ்.ஜெ.சூர்யா சாருடன் தான் அதிகம் இருக்க விரும்புவேன். அவரிடன் பேச பேச அவ்வளவு எனர்ஜி இருக்கும். எங்களின் கெமிஸ்ட்ரி தான் அதிகம் பேசப்படும் என இயக்குநர் ஆதிக் கூட சொல்லுவார் என்றார்.

கன்னட டீசரை வெளியிட்ட நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பேசும்போது,

உண்மையாகவே எனக்கு மூச்சு முட்டுகிறது. அந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு உள்ளேன். விஷாலுக்கு ஆயுதம் ஏதும் தேவை இல்லை. அவரே ஒரு ஆயுதம் தான். அந்த ஆயுதத்துடன் தான் 6 வருடம் பயணித்து வருகிறேன். அவர் எப்போது யாரிடம் பாய்வார் என்று தெரியாது.

ரமணா-நந்தாவின் உழைப்பு மிக பெரியது. சங்கத்திற்காக அந்த அளவு வேலை செய்துள்ளார்கள். மலேசியாவில் நடத்திய ஈவண்ட் அந்த அளவிற்கு பெரியது. லத்தியை விட 100 மடங்கு உழைப்பு அது. அதை மீண்டும் எங்களை தவிர வேர் யாராலும் செய்ய முடியாது.

விஷால் நண்பர்களுக்காக எதை வேண்டுமானாலும் இழப்பார். அதோடு சேர்த்து எதிரிகளையும் சம்பாதித்துக் கொள்வார். அந்த அளவு நன்மை செய்யும் மனிதர் அவர்.

நடிகர் மனோபாலா பேசும்போது,

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டபோது, விஷால் சும்மாவே அடிப்பானே லத்தியை குடுத்தா என்ன பண்ணுவான் என்று ரமணாவிடம் கேட்டேன். அதேபோல் டீசரில் மிரட்டியுள்ளார் விஷால். படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் ரோபோ ஷங்கர் பேசும்போது,

நான் மாலை 4 மணிக்கெல்லாம் உடையணிந்து இந்த விழாவிற்கு வந்துவிட்டேன். இங்கு வந்து பார்த்தால் ஆர்ட்டிஸ்டை அழைத்து வர சொன்னார்கள். இனி சினிமா சார்ந்த விழாக்களுக்கு கருப்பு உடை அணிந்து வரக் கூடாது என்பது அப்போது தான் புரிந்தது. மேலும் நான்  ஒரு கவிதை எழுதியுள்ளேன்

“குட்டி குட்டி கடைகளில் தேடுவான் மசால்
ஆனால், எவ்வளவு தடைகள் வந்தாலும் சமாளிப்பான் தம்பி விஷால்”. என்றார்.

நடிகர் சூரி பேசும்போது,

விஷாலுடன் நான் 6 படங்கள் நடித்திருக்கிறேன். மிக மிக நல்ல மனிதர். படப்பிடிப்பு தளத்தில் யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் உடனே உணர்ச்சிவசப் படுவார். அவருடைய உதவியாளரை அழைத்து என்ன என்று விசாரித்து உதவி செய்ய சொல்லுவார். அதே போல், ஒளிப்பதிவாளர் பாலு அண்ணன் ஒரு தீ க்கு ஷாட் வைத்தால் கூட அதை அள்ளி முத்தம் இட வேண்டும் என்பது போல் இருக்கும். அவருடன் நான் 6 படங்கள் பணியாற்றியுள்ளேன்.
 
அப்போது சூரி மற்றும் ரோபோ ஷங்கர் பற்றி பேசிய விஷால்,

சினிமாவில் நான் சம்பாதித்த சொத்து ரோபோ ஷங்கர் மற்றும் சூரி போன்றோர்கள் தான். என்னை சிரிக்க வைப்பது இவர்கள் தான். நாங்கள் எப்போதும் அடித்துக் கொண்டு தான் விளையாடுவோம். ஒரு முறை நான் சூரியை அறைந்துவிட்டேன் என நினைத்து சங்க பொறுப்பு வந்ததும் விஷால் திமிர் பிடித்து ஆடுகிறான் என்றார்கள். அவர்களிடம் நாங்கள் விளையாடினோம் என்பதை புரியவைப்பதே போராட்டமாகிவிட்டது என்றார்.

சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் பேசும்போது,

விஷாலை பற்றி இங்கு பலர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தேன். அனைவரும் அவரை பற்றி பேசும்போதும், நான் மூன்று மாதம் அவருடன் வேலை பார்த்த போதும், நான் வரும் காலத்தில் படம் இயக்கினால் இவரை வைத்து இயக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. நடிப்பில் மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் இருக்க மாட்டார். அங்கிருக்கும் நாய்களுக்கு தன் கையால் உணவளிப்பார்.

விஷால் வெளியே சிரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்.

காவல்துறையினர் படும் இன்னல்களையும், துயரங்களையும் இப்படத்தின் மூலம் விஷால் பேசியுள்ளார். இந்த படத்திற்கு விஷால் தான் சரியான தேர்வு.

பாகுபலி படமோ மற்ற படமோ, எனக்கு ஒரு 15 நிமிட காட்சிக்கான வேலை தான் இருக்கும். ஆனால் வினோத் என்னிடம் கதை சொல்லும் போது, 50 நிமிட காட்சி எனக்குள்ளது என்றார். அது என்னுடைய முழு திறமையையும் வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது.

நாம் காலை நேரத்தில் வேலைக்கு செல்லும்போது சிக்னலில் இருக்கும் போலீஸ் தான், மாலை வீடு திரும்பும் போதும் இருப்பார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் நிழலில் இருப்பார்கள். இல்லையென்றால் ரோட்டில் தான் இருப்பார்கள்.

லத்தி சார்ஜ் படத்தினால் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் விடுதலை படத்தின் இரண்டு சண்டை காட்சிகளை நான் இழந்துவிட்டேன். அதே போல் சில படங்கள் தவறின.

என்னுடைய 27 வருட அனுபவத்தில், ஹிர்த்திக் ரோஷன் நான் சொல்லுவதை 100 சதவீதம் முழுமையாக செய்வார். அதன் பிறகு விஷால் தான் அதை செய்துள்ளார். ஒரு சண்டை காட்சியில் கயிறு கட்டாமலே விஷால் சார் மேல் ஏறி வந்தார். அப்போது தான் அவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது.

அவர் ஒரு ஸ்டண்ட் மேனாகவே மாறிவிட்டார். நாங்கள் சாப்பாட்டிற்காக இந்த வேலையை செய்கிறோம். ஆனால், இவர் விருப்பதிற்காக இதை செய்கிறார்.

பீட்டர் ஹெயின் பற்றி பேசிய விஷால்,

பீட்டர் ஹெயின் என்னைப் பார்த்து பயந்தேன் என்று கூறினார். ஆனால், நாங்கள் தான் அவரைப் பார்த்து பயந்தோம். படம் ஆரம்பித்தது தான் நாங்கள். ஆனால், முடித்தது பீட்டர் ஹெயின் தான். என்னுடைய ஆசையைத் தீர்க்கும் அளவிற்கு பணியாற்றியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகன் என்று நினைத்து நடிக்கவில்லை. சண்டை இயக்குனராக நினைத்துக் கொண்டு தான் நடித்தேன் என்றார்.

நடிகை சுனைனா பேசும்போது,

நான் எப்போதும் விமானத்தில் செல்லும் போது ஹெட் செட் போட்டு கொண்டு தூங்கி விடுவது வழக்கம். அப்படித்தான் நேற்றும் இவ்விழாவிற்கு வருவதற்காக என் வழக்கப்படி தூங்கி கொண்டிருந்தேன். அப்போது யாரோ என் வலது தோளை தட்டினார்கள். யார் என்று பார்த்தேன். உங்களை அவர் அழைக்கிறார் என்று கூறினார்கள். திரும்பி பார்த்தால் விஜய் சார் இருந்தார். தெறி படத்தைப் பற்றி பேசி விட்டு இப்போது எதற்காக சென்னைக்கு வருகிறீர்கள் என்று கேட்டார். லத்தி டீஸர் வெளியீட்டு விழாவிற்கு என்று கூறினேன். நானும் டீசரை யூடுயூபில் பார்க்கிறேன் என்று கூறினார். எனக்கும் விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.

பாலு சாருடன் 3 படங்கள் நடித்திருக்கிறேன். அவர் என்னுடைய அபிமான ஒளிப்பதிவாளர்.

 நான் என்ன உழைத்தேனோ அந்த அளவுக்கு மாஸ்டர் ராகவும் உழைத்திருக்கிறான். மேல் இருந்து கீழே குதி என்றால் குதித்து விடுவான் என்றார்.

சிறுவன் ராகவ் பேசும்போது,

இப்படத்தில் விஷால் அண்ணன் கூட நடித்ததில் மகிழ்ச்சி. இந்த படத்தில் என்னை தூக்கி கொண்டு குதிக்கும் காட்சிகள் 3 இருக்கும். அதில் நான் விழுந்து விடக் கூடாது என்று என்னை இறுக்கமாக பிடித்துக் கொள்வார். அப்போது அவருக்கு அடிபட்டு கையில் ரத்தம் வந்தது. மேலும், விஷால் சார் நன்றாக மேஜிக் செய்வார். என் வயிற்றைத் தொட்டு பார்த்தே நான் என்ன சாப்பிட்டேன் என்று கூறி விடுவார்.

சுனைனா அக்கா நன்றாக பேசினார்கள். இயக்குனர் சார் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக சொல்லி விடுவார். நானும் அதை கேட்டபடியே செய்வேன். நான் நடித்து முடித்ததும் என்னை பாராட்டுவார். பீட்டர் ஹெயின் அண்ணா சூப்பராக சண்டைக் காட்சிகள் அமைப்பார். அவர் கூறியதை செய்வேன். தினமும் அவர் ஒவ்வொரு உடை மற்றும் ஷூ விதவிதமாக அணிந்து வருவார்.
அதைப் பார்த்து நானும் 2 ஷூ வாங்கினேன். அவரைப் போலவே நானும் இன்று ஷூ அணிந்து வந்திருக்கிறேன்.

பாலு சார் ஒவ்வொரு டேக் முடிந்ததும் என்னிடம் காட்டுவார். நான் சூப்பர் என்று சொல்லுவேன். கார்த்தி, சரத், சுகுமார், ரமேஷ் வெங்கட், சக்தி, சிவா, விஷ்வா எல்லா அண்ணா மற்றும் பிரீத்தி அக்கா என்னுடன் சந்தோசமாக பேசுவார்கள். ரமணா அண்ணா, நந்தா அண்ணா என்னை ஊக்குவிப்பார்கள். இப்படத்தில் பணிபுரிந்து அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குனர் வினோத் குமார் பேசும்போது,

உதவி இயக்குனராக இருந்த என்னிடம் கதை கேட்டு, இயக்குனராக அறிமுகமாக்கி தயாரிப்பாளர்களை கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. இப்படத்தை நன்றாக கொடுத்திருக்கிறார். அவருக்கு நான் எப்போதும் கடமைப் பட்டிருக்கிறேன்.

லத்தி சார்ஜ் ஒரு சாதாரண கான்ஸ்டபிளோட அசாதாரணமான வாழ்க்கை சூழலை சொல்லி இருக்கும் படம்.

எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். சாதாரண கமர்சியல் படமாக இருக்காது. கிளாசிக் கமர்சியல் படமாக இருக்காது. விஷால் படங்களிலேயே இது வித்தியாசமான படமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

சுனைனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராகவ் இரண்டாவது கதாநாயகன் என்று கூறும் அளவிற்கு நடித்திருக்கிறார்.

எனக்கு கைகளாக இருந்தது உஷாவும், கலை இயக்குனரும், கண்களாக இருந்தது பாலா சார். முதுகெலும்பாக இருந்தது விஷால் சார். மூளையாக இருந்தது பீட்டர் ஹெயின் மாஸ்டர். இப்படம் எடுப்பதற்கு நிறைய சக்தி தேவைப்பட்டது. இப்படத்திற்கு நிறைய செலவானது. ரமணாவும் நந்தாவும் செய்து கொடுத்தார்கள் என்றார்.

ஒளிப்பதிவாளர் பாலு பேசும்போது,

நாங்கள் எதாவது ஆசிரமத்தில் விழாவிற்கு ஏற்பாடு செய்தால் 10 நாட்களுக்கு முன்பே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னால் கூறினாலே நாம் போவதற்குள் அவர் வந்து விடுவார்.

சினிமாவில் நான் 40 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு பிடித்த நாயகன் விஷால் தான் என்றார்.

விஷால் பேசியபோது,

அவன்-இவன் படத்தில் நான் நடித்த பின்பு தான் என்னுடைய நடிப்பின் மீதான மரியாதை கிடைத்தது. அந்த படத்தில் கடைசி 10 நிமிடம் பாலா சார் எனக்கு கொடுத்தார். அதே போல் இந்த படத்தில் இயக்குனர் வினோத் எனக்கு கடைசி 10 நிமிட காட்சி கொடுத்திருக்கிறார். அப்போது ரமணா மற்றும் நந்தாவிடம் 12 கேமராக்கள் வைத்துவிடுங்கள். நான் என்ன நடிக்க போகிறேன் எப்படி நடிக்க போகிறேன் என்று தெரியாது. மீண்டும் அதை நடிக்க முடியுமா என்றும் தெரியாது என்றேன். அதே போல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. இது போன்ற வாய்ப்புகள் தான் ஒரு நடிகனுக்கு மரியாதையை ஈட்டி தரும் என்றார்.

வழக்கமாக நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு ஏதேனும் அடிபட்டால் “இவனுக்கு தையல் போட்டு கூட்டிட்டு வர்றதே இவருக்கு வேலையா போச்சி” என்று கனல் கண்ணன் மாஸ்டரை அம்மா திட்டுவார்கள். ஆனால், இம்முறை பீட்டர் ஹெயின் மாஸ்டர் எந்த திட்டும் வாங்கவில்லை. இவன் அடிபட்டாலும் சரி செய்துவிட்டு மீண்டும் நடிக்க தான் செல்லுவான் என்று அம்மாவுக்கே ஒரு புரிதல் வந்துவிட்டது. விஜய் பாபு அவர்கள் எனக்கு இன்னொரு அப்பா.
என் படத்தைப் பார்த்துவிட்டு அது எப்படி இருக்கிறது என்று முகத்துக்கு நேர் பளிச்சென்று கூறிவிடுவார் எனது தங்கை ஐஸ்வர்யா. என் ஒவ்வொரு படத்தையும் இரண்டு மூன்று முறை நான் பார்த்துவிட்டு தான் அவருக்கு காட்டுவேன்.

இந்த குடும்பம் உழைக்காமல் “லத்தி” பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருக்காது. அனைவருக்கும் நன்றி என்றார்.

Laththi Teaser Launch video Link

Udhayanithi & Vishal speech https://we.tl/t-xywFSmmbft

SJ.Suriya speech https://we.tl/t-H0KM0ufdsX

Nandha & Ramana speech https://we.tl/t-YeGp6f3lrM

Nasser & Manobala speech https://we.tl/t-jLQINW9Wn2

Soori & Robo shankar speech https://we.tl/t-2O3o9cxFDs

5Star Kathirasan speech         https://we.tl/t-veRTQuMOEE

Master peter hein speech  https://we.tl/t-IK9anqDo6e

Sunainaa speech  https://we.tl/t-qZGIGsm4nI

T.Siva speech   https://we.tl/t-rty0mesn6l

Vinoth speech  https://we.tl/t-RYs3jExw40

Praveenkanth speech   https://we.tl/t-Ueu1cYtC5p

K.Rajan speech  https://we.tl/t-DnbpKu9bcU

Chamber president katragadda prasad     https://we.tl/t-wpSwTw8LAB

Movie team speech  https://we.tl/t-xW1qlvzAhR