விஷாலுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நோட்டு, புத்தகங்கள் பரிசாக அளித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

சென்னை பிரசாத் லேப்பில் இன்று நட ந்த மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழாவில் , ஹீரோ விஷாலுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தலைவர் கவிதா மற்றும் சங்க உறுப்பினர்கள் , புதுமையான முறையில் வாழ்த்து தெரிவித்தனர். ஆம், விஷாலுக்கு விழாக்களில் சால்வை அணிவிப்பது, பூங்கொத்து வழங்குவது பிடிக்காது. எனவே அவரின் தேவி அறக்கட்டளை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் நோட்டு, புத்தகங்கள் பரிசாக அளித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.அதை விஷால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, நன்றி தெரிவித்தார் .