திருமஞ்சன திருவிழா

திருமஞ்சன திருவிழா

108 நாட்கள்
108 கலசம்
108 சுமங்கலி பூஜையுடன்
லக்ஷ குங்குமார்ச்சனை
3.3.2023 வெள்ளிக்கிழமை முதல் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,
அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், வருண பகவானின் கருணை வேண்டியும், உலக மக்கள் நீண்ட ஆயுள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும், திருமணத் தடை, தொழில் தடை, காரியத் தடை, உத்தியோகத்தடை போன்ற பல்வேறு தடைகள் நீங்கவும் திருஷ்டி தோஷங்கள், நாட்பட்ட வியாதிகள், விலகி நல் ஆரோக்கியம் பெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், மாசிமகம், யுகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு), தமிழ் வருடப்பிறப்பு, பங்குனி உத்திரம், தொழிலாளர் தினம், அட்சய திரிதியை, வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, ஏகாதசி, வசந்த நவராத்திரி, ஸ்ரீ தாய் மூகாம்பிகை பிரதிஷ்டை, ஸ்ரீ வீரபத்திரர் பிரதிஷ்டை மேலும் பல்வேறு பரிவார தெய்வங்களின் பிரதிஷ்டா தினங்களை முன்னிட்டு சுபகிருது வருடம் மாசி 19ம் நாள் மார்ச் 3.3.2023 வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினம் முதல் வருகிற சோபகிருது வருடம் ஆனி 3ம் நாள் ஜுன் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினம் வரை தினமும் மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலசங்கள் கொண்டு 108 நாட்கள் காலை 10.30 மணி முதல் 11.40 மணிவரை தொடர் திருமஞ்சன திருவிழாவும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை லக்ஷ குங்குமார்ச்சனை சுமங்கலி பூஜை வைபவமும் நடைபெறவுள்ளது. மேற்கண்ட வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு 89 பரிவார மூர்த்திகள், சிவலிங்க ரூபத்திலுள்ள 468 சித்தர்களை தரிசித்து திருவருளுடன் குருவருளையும் பெற அன்புடன் அழைக்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
94433 30203