சமூக அக்கறை மிக்க படைப்பாக,, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”.

“பூர்வீகம்”

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”.

நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவாயம் இந்த இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிற்காகவும் முழுதாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும் அப்படியே உதறி தள்ளிவிட்ட விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகலமங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது… ஆனால் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும்… ஆகவே தனி மனிதனோ அரசாங்கமோ விவசாய நிலத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் மேலும்… படித்தவனோ பாமரனோ… அரசனோ ஆண்டியோ… யாராக இருந்தாலும் அவன் வாரத்தில் ஒரு நாளாவது விவசாயத்தில் ஈடுபடவேண்டும்… என்பதை வலியுறுத்தக்கூடிய படமாக வந்திருக்கிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் அழகிய படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் G.கிருஷ்ணன்.

இப்படத்தின் அறிமுக நடிகர் கதிர் நாயகனாக நடித்துள்ளார். மியாஶ்ரீ நாயகியாக நடித்துள்ளார். போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, YSD சேகர், சூசன், ஶ்ரீ ரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மாயவரம், தஞ்சாவூர், அரியலூர் , சென்னை மற்றும் திருவள்ளூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

தொழில் நுட்ப குழு விபரம்
தயாரிப்பு – பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி
தயாரிப்பாளர் – டாக்டர் R முருகானந்த்
எழுத்து, இயக்கம் – G. கிருஷ்ணன் Df Tech
ஒளிப்பதிவு – விஜய் மோகன் Df Tech
இசை – சாணக்யா
படத்தொகுப்பு – சங்கர் K
பாடலாசிரியர் – ஏகாதசி
கலை இயக்கம் – செல்லம் ஜெயசீலன்
பாடகர்கள் – டாக்டர் R முருகானந்த் சாய் விக்னேஷ், மது ஐயர், K.பார்த்திபன், G.அமிர்தவர்ஷினி,             
நிர்வாக தயாரிப்பாளர் – K. சந்தோஷ்
மக்கள் தொடர்பு – செல்வரகு.