கலகலப்பான ரோம் காம் திரைப்படம் “மைனர்” கோலாகலமாக துவங்கியது!!

Arabi production & Viyan ventures மற்றும் MayDay Productions சார்பில் இணைந்து தயாரிக்க, ஃபைண்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் திரைப்படம் “மைனர்”. இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.

இன்றைய இளைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பது தான் இப்படத்தின் மையம். பள்ளி பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் பயணமாகிறான். அந்த காதல் மீண்டும் சேர்ந்ததா? இருவரும் இணைந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை.

இப்படத்தில் இலங்கை ராப் பாடகர் வாகீசன் நாயகனாக நடிக்க, பிக்பாஸ் புகழ் ஜனனி நாயகியாக நடிக்கிறார். சார்லி, செண்ட்ராயன், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொழில் நுட்ப குழு விபரம்
எழுத்து-இயக்கம் : வினோத் ராஜேந்திரன்
ஒளிப்பபதிவு : றெஜி செல்வராசா
இசை : சூர்ய பிரசாத் R
படத்தொகுப்பு : அருண் பிரசாத் S
கலை : அசோக்சந்தர்
ஆடை வடிவமைப்பு : பிரியாதர்ஷினி
டிஐ : கார்த்திகேஷ்
ஒலி வடிவமைப்பு : சதீஷ் குமார் A
பப்ளிசிட்டி வடிவமைப்பு : ராகவ்ஆர்ட்ஸ்
தயாரிப்பு மேற்பர்வை : ஹெட்விஜ் JB சூர்யா
தயாரிப்பு உதவி : நவீன் பிரபு, வினோத் பாபு
மக்கள் தொடர்பு : A ராஜா