சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த சின்னஞ்சிறு கிளியே திரைப்படம்

அவுட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் விருது ,    சிறந்த அறிமுக இயக்குனர் விருது , 
சிறந்த குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கான திரைப்பட விருது , 
இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் விருது,
சிறந்த இந்திய திரைப்பட விருது,
சிறந்த இயக்குனர் ஸ்பெஷல் ஜூரி விருது,
போன்ற பல்வேறு விருதுகளை பல்வேறு இன்டர்நேஷனல் பெஸ்டிவலில் வென்றுள்ளது.
இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தை மையமாக கொண்டு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் விபரீதத்தையும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக உருவாகியுள்ளது.
படபிடிப்பு முழுவதும் முடிவடைந்து திரைக்கு வர தயாராக இருக்கும் இப்படம் மக்கள் பார்வைக்கு போவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு  பல விருதுகளை வென்று இருக்கிறது.
எங்களுடன் தொடர்ந்து பயணிக்கும் உங்களுடன் இவ்விருகளை பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இத்திரைப்படத்தை செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில் நாதன் தயாரித்துள்ளார். சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக திரு. பாண்டியன் குப்பன் பணிபுரிந்துள்ளார்.  மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார்.
எடிட்டிங் பணிகளை குமரேஷ். கே. டி மேற்கொண்டுள்ளார் கலை இயக்குனராக ராஜூ  பணியாற்றியுள்ளார்
சின்னஞ்சிறு கிளியே ஹீரோ – செந்தில்நாதன் ஹீரோயின் – சாண்ட்ரா நாயர் குழந்தை நட்சத்திரம் – பதிவத்தினி செந்தில்நாதன்  Supporting artist – குலப்புலி லீலா, செவ்வியல் கலைஞர் செல்லதுரை, விக்ரமாதித்யன், பாலாஜி சண்முகசுந்தரம், குரு, அர்ச்சனா சிங்.