அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில்,ஏ.ஆர்.மு ருகதாஸின் “மதராஸி” படத்தி லிருந்து சாய் அபயங்கர் குரலி ல் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!!

“மதராஸி” படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!

டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான “மதராஸி” படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது.

துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத்தில், அழுத்தமான பிரேக்அப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

“மதராஸி” படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில்,
நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு “சலம்பல” பாடலை, மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும் SK உடன் இணைவது எப்போதும் மிரட்டலான ஒன்றாக இருக்கும். இயக்குநர் முருகதாஸின் தொலைநோக்குப் பார்வை மிகத் தெளிவாக இருந்தது. இது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இந்தப்பாடல் கண்டிப்பாக அனைவரையும் கவரும்.