ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

*ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: ஸ்ரீ நம்பெருமாள் விருப்பன் திருநாளின் (சித்திரைத் தேர்) 9 ம் திருநாள் அன்று ஸ்ரீ நம்பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து ஆண்டாள் கிளிமாலை , பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் கொண்டு வந்து ஆண்டாளின் கிளி மாலையை ஸ்ரீ நம்பெருமாளுக்கு சாற்றுவார்கள் 

இந்த ஆண்டு   09.05.2021  விருபன் திருநாளின் 9-ம் திருநாளை முன்னிட்டு  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிவில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் கிளிமாலை பட்டுவாஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் , தக்கார் ரவிச்சந்திரன் , ரமேஷ் பட்டர் ஆகியோர் கொண்டு வந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்துவிடம் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கந்தசாமி , அறங்காலர்கள் ரங்காச்சாரி , டாக்டர் சீனிவாசன் ,மேலாளர் உமா , உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ,கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர் , ஸ்ரீ ஆண்டாளின் கிளி மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள்   விருப்பன் திருநாளின் 9ம் நாள் அன்று ஸ்ரீ நம்பெருமாளுக்கு சாற்றப்படும் .
–T RAGHAVAN