எஸ்.ஜே.சூர்யா – யாஷிகா அனந்த் நடித்துள்ள ” கடமையை செய் “
கடமையை சரியாக செய்தால் அதற்கான பலன் தானாக வரும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
இயக்குனர் சுந்தர்.C யிடம், உதவியாளராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியதோடு அவரை நாயகனாக வைத்து ” முத்தின கத்திரிக்காய் ” என்ற வெற்றிப் படத்தை இயக்ககிய வேங்கட் ராகவன் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
நெடுநல்வாடை, எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்னசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு N.B ஸ்ரீகாந்த் , தடம் படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார், பாடல்கள் அருண்பாரதி, சண்டை பயிற்சி பிரதீப் தினேஷ், நடனம் தீனா – சாண்டி, மக்கள் தொடர்பு மதுரைசெல்வம், மணவை புவன் , கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் TR ரமேஷ்,
நாகர் பிலிம்ஸ் ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் “கடமையை செய்” திரைப்படம் படப்பிடிப்பு சிறப்பாக நிறைவுற்றது. POST PRODUCTION வேலைகள் வெகு தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும் நடிகர்கள், TECHNICIANS அனைவருக்குமான PCR TEST ( கொரோனா TEST ) எடுக்கப்பட்டு அதில் அனைவருக்கும் NEGATIVE என வந்தபிறகே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். இப்படியாக இரண்டு மூன்று முறை தயாரிப்பு தரப்பில் கொரோனா CAMP அமைக்கப்பட்டு அனைவரும் NEGATIVE என உறுதிசெய்யப்பட்டு பிறகே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நிறைய நட்சத்திர பட்டாளம் என்பதால் தயாரிப்பாளர்கள் மேலும் கூடுதல் கவனம் செலுத்தினார்கள்.
படப்பிடிப்பு இனிதே முடிந்தது என நாங்கள் சந்தோஷப் பட்டுக்கொண்டிருந்த நிலையில் யாஷிகா ஆனந்த் வாகன விபத்தில் சிக்கி அவருடன் சென்ற தோழி மரணம் அடைந்த நிலையில் படுகாயத்துடன் உயிர் தப்பினார் என்ற செய்தி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. யாஷிகா ஆனந்த் தொழில் ஈடுபாடும், திறமையும் மிக்கவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
“கடமையை செய்” திரைப்படம் மிகவும் நன்றாக வந்துள்ளதாக அனைவரும் கூறும் நிலையில், ஒரு நல்ல வெற்றியை நோக்கிய அவர் திரை பயணத்தின் இடையில் இது போன்ற விபத்து யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.