கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிகப் புராண தொடர்.

சிவசக்தி திருவிளையாடல்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும்
வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 
மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது… சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிகப் புராண 
தொடர். எல்லோரின் அமோக ஆதரவுடன் வெற்றித் தொடராக ஜூன் மாதம் முதல்
ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த வாரம் –

சனியின் சூழ்ச்சி –
சிவனுடன் மோதும் கார்த்திகேயன்


அசுர மாதா திதிக்கு, சிவன் பார்வதியை அழிக்க இருந்த அனைத்து மார்க்கமும்
அடைக்கப்படுகிறது. இதனால், சூர்யா புத்திரனான சனி தேவனை நாடுகிறார் அசுர 
மாதா திதி. சனிபகவான் சிவன் பார்வதியின் குடுபத்திற்கு எதிராக திரும்புகிறார். 
கார்த்திகேயனை சனியின் பிடியில் சிக்கவைத்து, கார்த்திகேயனை சிவனுக்கு எதிராக
திருப்புகிறார். இதனால் கைலாயத்தில் பிரச்னை உருவாகிறது.

இந்திரனின் மகளான தேவயானையயை திருமணம் செய்ய கார்த்திகேயன் 
விரும்புகிறார். ஆனால், சிவன் மீது கொண்ட வன்மத்தால், கார்த்திகேயன் 
தேவயானை திருமணத்திற்கு இந்திரன் மறுத்துவிடுகிரார். இதனால் இந்திர 
லோகத்தில் இருந்து தேவயானையயை கடத்தி செல்கிறார் கார்த்திகேயன். 
இதனை கண்ட சிவபெருமான் அவர்களை தடுக்கிறார். அதனால் சிவபெருமான்
மீது கோபம் கொள்ளும் கார்த்திகேயன், அவருடன் போருக்கு தாயாரகிரான். 
அவர்களின் போரை தடுக்க வழி தெரியாமல் தேவர்கள் கலங்கி நிர்க்கிறார்கள்.
சிவபெருமான், கார்த்திகேயன் போரை யார் தடுப்பார்கள்? கார்த்திகேயன் தேவயானை
திருமணம் நடக்குமா? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இந்த வாரக் 
கதை நகர்கிறது
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு
ஒளிபரப்பகும்
சிவசக்தி திருவிளையாடல் தொடரில் காணத் தவறாதீர்கள்.