உலகளாவிய அளவில் சாதனைகள் புரிந்திட்ட தென்னிந்திய திறமையாளர்களை கௌரவிக்கும் SIGTA விருது கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார் கத்தார் வாழ் தமிழர் சாதிக்பாஷா.
2024 இந்த வருடம் கத்தாரின் தலைநகரான தோகாவில் உள்ள QNCC அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழில் திரையுலகில் நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல், காயத்ரி, ஜீவாரவி, ரியாஸ் கான், விச்சு, T.S.K , கன்னட திரையுலகில் நடிகையாக மிகப்பெரிய சாதனையை படைத்து அரசியலில் இருந்து வரும் சுமலதா மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பாளர் நடிகர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
அம்மு மற்றும் அஸார் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
கத்தாரில் இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் கத்தார் அரசு அதிகாரிகள் பங்கேற்க, அனைத்து தமிழ்ச் சங்கங்களின் ஒத்துழைப்புடன், தமிழ், மலையாளம், கன்னட மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வில் சிறந்த தொழிலதிபர்கள் சிறந்த சமூக சேவகர்கள் என பல துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
‘சமரன்’ படத்தின் கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு கிடைத்த பெருமை மிக்க ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது! நடிகர் சரத்குமாரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் ‘சமரன்’ படத்தின் கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜிக்கு கிடைத்த பெருமை மிக்க ‘ஐன்ஸ்டீன் வேர்ல்டு ரெக்கார்ட்’ விருது! கலை இயக்குநர் ஸ்ரீமன் பாலாஜி கலைஞரின் கதை, வசனத்தில் ‘கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் கலை இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானார். இதுவரை 15க்கும் மேற்பட்டப் படங்களில் பணியாற்றியுள்ளார்.…
சிறப்பு விருந்தினர்களாக இந்தியத் தேசிய விருது பெற்ற இயக்குநர்களான திரு பார்த்திபன் மற்றும் வசந்த பாலன் வருகை தந்து சிறப்பித்தனர். மெய் எனும் பெயரில் திரைப்பட ஆர்வலர்கள், வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. மாதந்தோறும் நடந்து வரும் இந்த திரைப்பட திருவிழாவினை அதன் நிர்வாக இயக்குநரான திரு. S. ஜெயசீலன் அவர்கள் மற்றும் P.அன்பழகன் தொலைக்குப்பார்வையுடன் வழிநடத்தி வருகின்றார்கள். மெய் சர்வதேச திரைப்பட…
சென்னையில் நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்கான விருதினை நடிகர் கருணாஸ், நடிகர் அருண் பாண்டியன், நடிகை இனியா, நடிகை ரித்விகா, நடிகர் ‘பாகுபலி’ பிரபாகர் நடிப்பில் வெளியான 'ஆதார்' திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வெண்ணிலா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் திருமதி சசிகுமார் வழங்க, இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'ஆதார்'. எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை…