ரிஸில் ஒரு புரட்சிகர அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது: Rimix
ரிஸில் Rimix எனப்படும் அற்புதமான அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது கிரியேட்டர்கள் மில்லியன் கணக்கான மாஷ் அப் மற்றும் தனிப்பட்ட வீடியோக்களை நொடிகளில் உருவாக்க அனுமதிக்கிறது. ஷார்ட் வீடியோ ஆப்களுக்கு உலகின் முதல் வீடியோ மிக்ஸிங் அம்சமான ரீமிக்ஸ் (Rimix) ரிஸில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த அம்சம் பயனாளர்களை சில நொடிகளில் 2 முதல் 5 வீடியோக்களை பயன்படுத்தி வீடியோ மாஸ் அப்-களை உருவாக்க அனுமதிக்கிறது. கிரியேட்டர்கள் ஏற்கனவே ரிஸில் பயன்பாட்டில் உள்ள வீடியோக்களை தேர்வு செய்யலாம் அல்லது தங்களது சொந்த புதிய வீடியோக்களை பதிவு செய்யலாம். மேலும் உங்களுக்கு விருப்பமான ஒலிப்பதிவை (Soundtrack) சேர்த்து, உங்கள் தலைசிறந்த படைப்பு உலகத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.
பிற ஷார்ட் வீடியோ ஆப்கள் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட டூயட் அம்சத்தை மீண்டும் கண்டுபிடித்த நிலையில், ரிஸிலின் Rimix ஒரு முழுமையான புரட்சிகர அம்சமாக உள்ளது. சோனி மியூசிக் மற்றும் ஆதித்யா மியூசிக் உடனான கூட்டுறவின் காரணமாக சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் ரிஸில் லைப்ரரியில் உள்ளது. இது மில்லியன் கணக்கான அற்புதமான ரீமிக்ஸ் வீடியோக்களுக்கு வழிவகுக்கும்.
இதுகுறித்து ரிஸில் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் சப்னா படேல், ”எங்கள் ரிஸில் பயனாளர்கள் அனைவரையும் படைப்பாளிகளாக மாற்றுவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ரிஸில் உடன் நாங்கள் எங்கள் இலக்கிற்கு மிக அருகில் உள்ளோம். பயனாளர்கள் தங்களது வீடியோக்களை உருவாக்கவும், கதைகளை பகிரவும் ரீமிக்ஸ் அனுமதிக்கிறது,” என்று தெரிவித்து இருக்கிறார்.
ரீமிக்ஸ் அம்சத்தின் பீட்டர் வெர்ஷன் பயனாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த அவர்களின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
நடிகையும், மாடலுமான சிம்ரன் பேல், ”ரீமிக்ஸ் வீடியோ எடிட்டிங் நேரத்தை பன்மடங்கு குறைத்துள்ளது. இது மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் உள்ளது. மேலும் பயன்படுத்த பாதுகாப்பாகவும் இருக்கிறது,” என தெரிவித்து இருக்கிறார்.
நடன இயக்குநர் ராகுல் சூர்யவன்ஷி இதுகுறித்து, ”நான் ரீமிக்ஸ் அம்சத்தை ரிஸிலின் பீட்டா வெர்ஷனில் முயற்சி செய்தேன். டான்ஸ் மாஸ் அப் வீடியோக்களை தயாரிப்பது இப்போது சில நொடிகளில் சாத்தியம்,” என தெரிவித்து உள்ளார்.
நடன ஆசிரியரும், பேஷன் பிளாக்கருமான ஷானு டாகோர் இதுகுறித்து, ” ரிஸிலின் ரீமிக்ஸ் பாடல்கள் மாஸ் அப்களை வீடியோக்களுடன் எளிதாக உருவாக்க உதவுகிறது. எனது ஃபாலோயர்கள் புதிய மாஸ் அப்-களை விரும்புகின்றனர்,” என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
பயனாளர்கள் ரீமிக்ஸ் அம்சத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள் மற்றும் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்? என்பதைக்காண ரிஸில் ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளது. ரிஸில் இந்தியாவின் முன்னணி ஷார்ட் வீடியோ ஆப் ஆகும். இது ஷார்ட் வீடியோ மற்றும் வலைத்தொடர் சந்தையில் அதன் தனித்துவமான அம்சங்கள் காரணமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுத்தி உள்ளது. ஒரே பிளாட்பார்மில் உள்ளடக்கத்தை உருவாக்க படைப்பாளிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை ரிஸில் தன்னுடைய முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.