2025 ஆம் வருடத்தில் ராமராஜன் 4 படங்களை வெளியிடுவது என்று உறுதிகொண்டுள்ளார்

படத்தின் 25 வது நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க மக்கள் நாயகன் புளியங்குடி தியேட்டருக்கு வந்து விட்டு ஆலங்குளம் TPV திரையரங்கிற்கு சென்ற போது அங்கு வந்த தாய்மார்கள், பெரியோர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக தியேட்டர் உரிமையாளர்களிடம் ராமராஜன் ஒரு கோரிக்கை வைத்தார், அதாவது டிக்கெட் விலை இன்று எல்லா தியேட்டர்களிலும் அதிக விலைக்கு விற்பதாலும், கேண்டீன் ஸ்நாக்ஸ் ரேட்டும் ஜாஸ்தியாக இருப்பதால் எளியவர்கள் கூலி வேலை செய்பவர்கள் தியேட்டருக்கு வரமுடியவில்லை, டிக்கெட் விலையை கணிசமாக குறைத்தால் மக்களுக்கு உள்ளே வர ஈஸியாக இருக்கும் என அன்புக்கட்டளையிட்டார், வருமானம், வியாபாரம் என்பதை தாண்டி பல நல்ல காரியங்களை டிரஸ்ட் மூலமாக செய்து வரும் திரையரங்கு உரிமையாளர்கள் திரு.TPV கருணாகரராஜா, திரு.TPV வைகுண்டராஜா அவர்கள் அதனை உடனே ஏற்று நல்ல கருத்துக்களை கொண்ட மக்கள் நாயகன் படம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் டிக்கெட் விலை யை ரூபாய். 50 க்கு அனுமதித்தனர், இத்தனை வருடங்களுக்கு பிறகு மக்கள் நாயகனை திரையில் பார்க்க ஆர்வமோடு இருந்த மக்களை இந்த கதையும் ராமராஜனின் நடிப்பும் அவர்களை வெகுவாக கவர்ந்து குடும்பம் குடும்பமாக வண்டி பிடித்துக் கொண்டு இரவுக் காட்சிகளும் ஹவுஸ்புல்லாகி சினிமா விமர்சகர்களை ஷாக்கடிக்கச் செய்தது, படத்தினை காண வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் பெரியவர்கள், தாய்மார்கள் கூட்டம் தியேட்டர் வளாகமே திருவிழா கோலம் கண்டது, தங்களது தியேட்டர் தொடங்கிய காலம் முதல் அன்று வரை இப்படி தாய்மார்கள் வந்து பார்த்ததில்லையென்று TPV திரையரங்கு உரிமையாளர்கள் பெருமிதமடைந்தனர், தென்காசி மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், மன்றத்து கண்மணிகள் அயராது உழைத்து மக்களிடம் எங்கள் அண்ணன் உங்களுக்கான அவசியமான கதையில் நடித்திருக்கிறார் வந்து பாருங்கள் என்று வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம், போஸ்டர் அடித்து ஒட்டி விளம்பரம் செய்தனர்.

116 நாட்கள் ஓடிய சாமானியன் கடைசி நாளன்றும் ஹவுஸ்புல் ஆனது இனியெங்கும் நடக்காத அதிசயமாகும், பொதுவாக 100 நாள் ஓடும் படங்கள் 1 ஷோ ஓட்டி முடிப்பார்கள், ஆனால் மக்கள் நாயகன் படம் நான்கு ஷோ, மூன்று ஷோ, நூறு நாளை கடந்த பிறகு 2 ஷோ என மக்கள் ஆரவாரத்துடன் களைகட்டியது, ஆலங்குளம் TPV திரையரங்கில் நடந்த இந்த அதிசயம் பல ஊர்களிலும் நடந்திருக்கும் தொலைக்காட்சி விளம்பரம், செய்தித்தாள் விளம்பரம் முறையாக செய்திருந்தால், SSS மல்டிபிளக்ஸ், TPV திரையரங்கு போன்ற சரியான திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தால் இன்னும் பல ஊர்களில் 50 நாட்கள், 75 நாட்கள் ஏன் அங்கேயும் 100 நாட்கள் ஓடியிருக்கும் என்பதே ஏற்கவேண்டிய சத்தியமான உண்மை. தொடர்ந்து பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர், பெரிய பேனர், நம்பர் ஒன் கதாநாயகி, நம்பர் ஒன் காமெடியன், பல மொழிகளில் முதலிடத்தில் உள்ள முன்னனி டெக்னீஷியன்கள் கொண்ட படங்களே வந்தது தெரியாத சூழலில் மிகப்பெரிய விபத்துக்குப்பிறகு பல வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாகவே நடித்து, தனது நல்ல கொள்கைகள் கடுகளவும் மாறாமல் நடித்து அப்படம் 116 நாட்கள் ஓடியதோடு அதுவும் கடைசி இரண்டு ஷோக்கள் ஹவுஸ் புல்லாகி ஓடுகிறதென்றால் இதுவல்லவா உண்மையான வெற்றி…. நேர்மையான வெற்றி…. எத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் அன்றைக்கு கொண்டாடியதைப்போலவே தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகவே நினைத்து கொண்டாடி மக்கள் நாயகனை ஆரத்தழுவி அமோக வெற்றிபெறச் செய்துள்ளனர் மக்கள்.

தேர்தலில் நின்றவர்கள் தான் இதுவரை மக்களுக்கு நன்றி சொல்ல சென்றதுண்டு, ஆனால் உலக திரை வரலாற்றில் தனது படத்தினை பார்த்து மிகப்பெரிய வெற்றியை தந்த ஆலங்குளம் சுற்றுவட்டார 60 கிராம மக்களை சந்தித்து நன்றி சொன்ன ஒரே நடிகர் அது மக்கள் நாயகன் மட்டுந்தான்,பணங்களை நான் என்றைக்குமே கணக்கிட மாட்டேன், எத்தனை பேர் மனங்களில் நான் இருக்கிறேன் என்பதே முக்கியம் என்ற கொள்கை கொண்ட நாயகனுக்கு மக்கள் தந்த பரிசே இந்த மகத்தான வெற்றி!

அதனால் தானோ என்னவோ இவருக்கு மக்கள் நாயகன் என்பது அவரது பேர் போலவே நிலைத்து விட்டது.

புதிதாக பிறக்கும் புத்தாண்டு 2025 ஆம் வருடத்தில் மக்கள் நாயகன் 4 படங்களை வெளியிடுவது லட்சியமாகவும், 3 படங்களாவது தந்து விட வேண்டும் என்று நிச்சயமாகவும் உறுதிகொண்டுள்ளார் என்பது சிறப்புச்செய்தி.
சாமானியன் வெற்றி…. சரித்திர வெற்றி…!

நன்றியுடன்….
N. நாகராஜன்
தென்னிந்திய ராமராஜன் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி.