ரகுமான் – பரத் இணைந்து நடித்துள்ள அறிவியல் கலந்த திரில்லர் படம் “சமரா” அக்டோபர் 13 ம் தேதி வெளியாகிறது.

Peacock Art House என்ற பட நிறுவனம் எம்.கே. சுபாகரன்,அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா” மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. 

“துருவங்கள் பதினாறு ” படத்திற்கு பிறகு  வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது  ‘சமாரா’ படத்திலும் 
அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பரத் மற்றும்  டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன்,  டினிஜ் 
வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல்,பினோஜ் டோஜ், கோஜ்னிகிருஷ்ணா,  ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான்,  ஜோலி எல்எல்பி விஸ்வரூபம் 2, தமிழில்  ஆகிய படங்களின்  ஆகிய படங்களின் மூலம் பிரபலபாலிவுட் நடிகர் மீர்சர்வார்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – சினு சித்தார்த் இசை – தீபக் வாரியர்  பின்னணி இசை – கோபி சுந்தர் 
பாடல்கள் – எடிட்டிங் – R. J.பாப்பன் ஸ்டண்ட் – தினேஷ் காசி  நடனம் – டேனி பவுல் 
தயாரிப்பு –  M.K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ்.  கதை, திரைக்கதை, இயக்கம் – சார்லஸ் ஜோசப்.

படம் பற்றி இயக்குனர் சார்லஸ்  ஜோசப் பேசியதாவது….

ஃபேமிலி செண்டிமெண்ட்டுடன் அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லர் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம்.விருவிருப்பாக நகரும் திரைக்கதை  அனைவராலும் நிச்சயம் 
பாராட்டப்படும் என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை. 

ரகுமான், பரத் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை காவியன் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள சம்ஹாரிணி, தற்போது வெற்றி நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் லாக்டவுன் நைட்ஸ் போன்ற படங்களை தயாரித்த 2 M சினிமா வினோத் சபரீஷ் தமிழகமெங்கும் இம்மாதம் 13 ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.