“கொட்டேஷன் கேங்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மேக்கப் ஆர்டிஸ்ட் தசரதன், “இந்தப் படத்தில் எனக்கு மேக்கப்பில் அதிக வேலை இருந்தது. ப்ரியாமணி உட்பட அனைவருமே கஷ்டப்பட்டுதான் வேலை செய்திருக்கிறோம். படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

ஸ்டண்ட் மாஸ்டர் ஓம் பிரகாஷ், “காஷ்மீரில் நிறைய ஸ்டண்ட் செய்தோம். சன்னி மேடம், ப்ரியாமணி மேடம் இருவரும் ரிஸ்க்கான ஸ்டண்ட்டை மழையில் ஒரே டேக்கில் டூப் இல்லாமல் ஓகே செய்தார்கள். இதுபோல பல ரிஸ்க்கான காட்சிகள் இருக்கிறது. ‘யாத்திசை’ படத்துக்குப் பிறகு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் காயத்ரிக்கு நன்றி”.

எடிட்டர் வெங்கட்ராமன், “எடிட்டாக இந்தப் படம் நிறைய வெர்ஷன் பார்த்தோம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களைப் போலவே எனக்கும் நிறைய வேலை இருந்தது. உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்”.

ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாதன், “வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. ஜாக்கி ஷெராப் போன்ற லெஜெண்ட்ஸூடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. ப்ரியாமணி, சன்னி லியோன் இருவரும் சிங்கிள் டேக்கில் ஸ்டண்ட் அசத்தி விட்டார்கள்”.

நடிகை அக்‌ஷயா, “ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி என சீனியர் நடிகர்கள் எல்லோருமே எங்களிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார்கள். படத்தில் ப்ரியாமணி எனக்கு நடிப்பதற்கான ஸ்பேஸ் கொடுத்தார். அது பெரிய விஷயம்! படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்”.

பாடலாசிரியர் அருண் பாரதி, “இயக்குநரை இங்கேதான் முதல்முறையாக பார்க்கிறேன். டிரம்ஸ் சிவமணி சார்தான் எனக்கு பாட்டெழுத சொன்னார். படத்தில் நான் எழுதிய அனைத்துப் பாடல்களுமே நன்றாக வந்துள்ளது. இயக்குநருக்கும் பிடித்துள்ளது. படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!”.

நடிகர் பிரதீப், “இயக்குநர் விவேக்கும் நானும் நண்பர்கள். அவர் படம் செய்யும்போது எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சீனியர் நடிகர்கள் ப்ரியாமணி, சன்னி லியோனுக்கு நன்றி. அடுத்த மாதம் படம் வெளியாகிறது!”.

நடிகர் அசோக், “படத்தின் இயக்குநர் விவேக், ப்ரியாமணி, சன்னி லியோன் என உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி”.

தயாரிப்பாளர் காயத்ரி சுரேஷ், “எனக்கு தயாரிப்பாளராக வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. மல்டி ஸ்டார்ஸ் படம் என்றால் நிறைய பிரச்சினைகள் வரும் என்று நினைத்தோம். ஆனால், அதெல்லாம் இல்லாமல் ப்ரியாமணி, சன்னி லியோன், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி”.

இணைத் தயாரிப்பாளர் விவேகானந்தன், “இது தமிழ்ப்படம். ஆனால், இந்திப்படம் போல எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், டெக்னீஷியன்ஸ் என எல்லோருமே சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இயக்குநர் பாலாவுக்கு பிறகு இயக்குநர் விவேக்கைதான் சொல்வேன். அந்த அளவுக்கு சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். படம் நன்றாக வர பிராத்திக்கிறேன்”.

நடிகை ப்ரியாமணி, “இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. இவர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் டேக் ஆஃப் ஆகவில்லை. இரண்டாவது சொன்ன இந்த கதை பிடித்துவிட்டது. என்னுடைய கரியரில் காண்ட்ராக்ட் கில்லர் ரோல் இதுவரை செய்ததில்லை. இயக்குநர் விவேக்கின் சகுந்தலா கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றினார்கள். எனக்கும் அக்‌ஷயாவுக்கும்தான் நிறைய காம்பினேஷன் காட்சிகள். அக்‌ஷயா சிறப்பாக செய்திருக்கிறார். சன்னி பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பத்மா கதாபாத்திரம் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். ஜாக்கி ஷெராப் சாரும் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார். படம் ஜூலையில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை சன்னி லியோன், “இந்தப் படத்தில் எனக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும். படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்”.

இயக்குநர் விவேக்குமார் கண்ணன், “முதலில் ப்ரியாமணி மேம் வைத்துதான் படத்தை ஆரம்பித்தோம். அடுத்து ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் என அடுத்தடுத்து வந்தார்கள். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது எளிதான விஷயம் கிடையாது. கேமரா மேன், ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் ஆர்டிஸ்ட் என எல்லோருமே சிறப்பாக பணி செய்தார்கள். ப்ரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பேபி சாராவுக்கு சிறப்பான கதாபாத்திரம் படத்தில் இருக்கிறது. தியேட்டரில் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்றுதான் நிறைய வேலை பார்த்திருக்கிறோம். படம் ஜூலையில் பாருங்கள்” என்றார்.