Puthuyugam Tv Pongal Spl Program
புதுயுகம் தொலைக்காட்சியில் ஜனவரி 15 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
*வீரத் தமிழா*
புதுயுகம் தொலைக்காட்சியில் ஜனவரி 15, தைப்பொங்கல் அன்று காலை 9:00 மணிக்கு *வீரத் தமிழா* என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பாரம்பரியம் சார்ந்த தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் கலை பற்றிய ஒரு விரிவான தகவல் மற்றும் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் இளம் சிலம்பாட்டக்காரர்கள் செய்து காட்டுகிறார்கள். இதில் சண்டை பயிற்சியாளர் மற்றும் இயக்குனர் ஜாகுவார் தங்கம் அவர்கள் பங்கு பெறுகிறார் .மேலும் இதில் கரகம் சுரேஷ் அவர்கள் பங்குபெறும் கரகாட்டமும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.இந்த நிகழ்ச்சியை நர்மதா மற்றும் அனு தொகுத்து வழங்குகிறார்.
காலை 6:00 மணிக்கு : செங்குன்றம், ஞாயிறு அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் ஆலயம்… சூரியன் பரிகார ஸ்தலம்…நடராஜர் சிறப்பு அபிஷேகம் ஆராதனை…
காலை 8 மணிக்கு : தென்காசி மாதவி இசைக் குழுவினர், தைத்திருநாளை வில்லுப்பாட்டில் பாடி கொண்டாடிய பொங்கலோ பொங்கல்…வில்லுப்பாட்டு ஸ்பெஷல்…
காலை 9:00 மணிக்கு : மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காட்டும் வீரத் தமிழா…
காலை 10:30 மணிக்கு : காமெடி நடிகர் சார்லி தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கொஞ்சம் டாக் கொஞ்சம் ஜோக்…
புதுயுகத்தில் தொலைக்காட்சியில் ஜனவரி 16 மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
காலை 6:00 மணிக்கு : சென்னை, கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் ஆலயம்…பித்ரு தோஷம் நிவர்த்தி ஸ்தலம்…நடராஜர் சிறப்பு அபிஷேகம் ஆராதனை…
காலை 8 மணிக்கு : சுட்டிக் குழந்தைகள் தங்களது நடனத்தால் மெய்சிலிர்க்க வைத்த Dancing Chutties…
காலை 9 மணிக்கு : மதுரை பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு சிறப்பு நேரலை… சீறி வரும் காளை…
ஜனவரி 17 காணும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
காலை 9 :00 மணிக்கு : புதுயுகம் ஜோதிடர்கள் கணித்துக் கூறும் சனிப்பெயர்ச்சி பலன்கள்…
காலை 10:00 மணிக்கு : பிரபல திரை கலைஞர்கள், ரசிகர்கள் பொன்மனச் செம்மல் டாக்டர் MGR அவர்களின் பிறந்தநாள் அன்று MGR குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும், நேற்று இன்று நாளை…சிறப்பு நிகழ்ச்சி…