Puthiyathalaimurai program Kitchen Cabinet
“கிச்சன் கேபினட்”
அன்றாட அரசியல் நிகழ்வுகளை அங்கதச் சுவையுடன் சொல்ல முடியுமா? முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கிறது புதிய தலைமுறையின் “கிச்சன் கேபினட்” நிகழ்ச்சி.
தலைப்புச் செய்திகள் முதல் சாதாரண நிகழ்வுகள் வரையிலான அனைத்து செய்திகளையும் பல்வேறு வடிவங்களில் வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். தொகுப்பாளர்கள் இருவர் இந்த நிகழ்ச்சியை தாங்கிச்செல்ல இடையிடையே இடிதாங்கி என்ற மேடைப் பேச்சாளர் அன்றாட நிகழ்வுகளின் குரலாய் ஒலிக்கிறார்.
அத்தோடு ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பின்னால் நடக்கும் கமுக்கமான அரசியல் நகர்வுகள் என்ன என்பதும் நிகழ்ச்சியின் ஊடாக இடம்பெறுகிறது. சுவையான நிகழ்வுகளை ஒரு திரைப்படம் போன்று கதையாக்கி காட்சிப்படுத்தும் விதமும் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சுவையான அம்சமாகும். சிவா மற்றும் விஷ்ணு பிரியா ஆகிய இரு தொகுப்பாளர்கள் இணைந்த வழங்கும் கிச்சன் கேபினட் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகி வருகிறது.