Punjab National Bank Inaugurates New Branch Premises and ATM at Perungalathur, Chennai
Punjab National Bank (PNB), the second largest public-sector bank in India, successfully inaugurated its 103rd branch with ATM at Perungalathur, Chennai, further strengthening its commitment to expanding banking accessibility and customer convenience.
The new branch is located at Door No. 38, Shraddhaa Arcade, Srinivasa Nagar, Kalaignar Nedunchalai, Perungalathur, Chennai – 600063.
The branch and ATM were formally inaugurated by Shri Pawan Singh, Zonal Manager, Chennai.
The inauguration ceremony was held in the presence of Shri Lalmohan Satapathy, Circle Head, Chennai; Shri N. Syed Anvar Theen, Deputy Circle Head; Shri Dhirendra Kumar Shashi, Deputy Circle Head; and Shri Jana Avinash, Branch Head.
Senior officials highlighted that the Perungalathur branch is equipped with modern banking infrastructure and digital facilities designed to deliver efficient, secure, and customer-centric services. The newly installed ATM will provide residents, business owners, and commuters in the locality with convenient 24/7 banking access.
The opening of the new branch reflects Punjab National Bank’s continued focus on expanding its footprint across Chennai and supporting the financial needs of individuals, traders, MSMEs, and corporates.
With this addition, Punjab National Bank reinforces its vision of being a trusted financial partner and bringing world-class banking services closer to customers.
பெருங்களத்தூரில் 103வது கிளை மற்றும் ஏடிஎம் சேவையை தொடங்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), தனது 103வது கிளை மற்றும் ஏடிஎம் சேவையை சென்னை பெருங்களத்தூரில் இன்று சிறப்பாக தொடங்கியது.
புதிய கிளை Door No. 38, Shraddhaa Arcade, Srinivasa Nagar, Kalaignar Nedunchalai, Perungalathur, Chennai – 600063 என்ற முகவரியில் அமைந்துள்ளது.
இந்த கிளை மற்றும் ஏடிஎம் சேவையை பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் திரு. பவன் சிங் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சென்னை சர்க்கிள் ஹெட் திரு. லால்மோகன் சதபதி, துணை சர்க்கிள் ஹெட்கள் திரு. என். சையத் அன்வர் தீன், திரு. தீரேந்திர குமார் சாஷி, மற்றும் கிளை மேலாளர் திரு. ஜனா அவிநாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெருங்களத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிகர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஆகியோருக்கு நவீன மற்றும் விரைவான வங்கி சேவைகளை வழங்கும் வகையில் இந்த கிளை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய ஏடிஎம் வசதி மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பணம் எடுக்கும் மற்றும் பிற அடிப்படை வங்கி சேவைகளை எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னையில் தனது சேவை வலையை மேலும் விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் நம்பகமான வங்கி சேவைகளை வழங்கும் நோக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த புதிய கிளை திறப்பு மூலம், வாடிக்கையாளர்களுக்கு மேலும் அருகாமையில் சிறந்த வங்கி சேவைகளை கொண்டு சேர்க்கும் தனது உறுதியை பஞ்சாப் நேஷனல் வங்கி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
