Pudhuyugam tv program MMV -KTKJ

முந்தி முந்தி விளையாடு”

புதுயுகம் தொலைக்காட்சியில் திரையுலக இளம் கதாநாயக, கதாநாயகர்கள் பங்கு பெரும் “முந்தி முந்தி விளையாடு” – கேம் ஷோ  பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது . இந்த நிகழ்ச்சி புதுமுக இளஞ்சோடிகள் பங்கேற்கும் கலகலப்பான கேள்வி பதில்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைத்தும் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உள்ளது. சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் காலை 9:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ மற்றும் கிருத்திகா தொகுத்து வழங்குகின்றனர் .

                                                                                “கொஞ்சம் டாக்,கொஞ்சம் ஜோக்”

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா நட்சத்திரங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் கலகலப்பான நிகழ்ச்சி ‘கொஞ்சம் டாக், கொஞ்சம் ஜோக்’ .

திரையுலகில் இன்றும் கல்லூரி மாணவராக கலக்கும் நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின்  கொஞ்சம் டாக்,கொஞ்சம் ஜோக் நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் இருதினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும். தனது மிமிக்ரியில் எம்ஜியார்,சிவாஜி, ரஜினி என்று கலக்கியிருக்கிறார். குறிப்பாக மறைந்த முதலமைச்சர் கலைஞரின் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சனை மிமிக்ரியால் அசத்திய நிகழ்ச்சி பார்ப்பவர்களை பரவசப்படும் வகையில் எடுத்து சொல்லியிருக்கிறார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கிருத்திகா.