Pudhuyugam Tv cookery program Rusikalaam vaanga
‘ருசிக்கலாம் வாங்க’
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் புத்தம் புது சமையல் நிகழ்ச்சி ‘ருசிக்கலாம் வாங்க’ திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 12.30மணிக்கும் மாலை 5:00மணிக்கும் ஒளிபரப்பாகிறது .
பாரம்பரிய சமையல் முதல் பாஸ்ட் புட் சமையல் வரை புதுயுக இல்லத்தரசிகள், சிறுவர்கள் மற்றும் இன்றைய இளைய தலைமுறைக்கு பிடிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையில் சமைத்துக்காட்ட மூன்று சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு விட விதமாக சமைத்து காட்டுவார்கள் .
இது மட்டுமின்றி அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களை பற்றி நீங்கள் அறியாத விஷயங்களும் , சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளும் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி ஆயிரம் எபிசோடை நெருங்கிக்கொண்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சியை மீனாட்சி தொகுத்து வழங்குகிறார்.