Pudhuyugam program Enrendrum SPB synapsis and images
“என்றென்றும் எஸ்.பி.பி”
தன் காந்த குரலால் காலம் கடந்தும் வாழும் மாபெரும் இசை கலைஞர் பாடும் நிலா எஸ்.பி.பி பிறந்தநாள் விழா கொண்டாடும் சிறப்பு இசை நிகழ்ச்சி “என்றென்றும் எஸ்.பி.பி”.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்,பாடலாசிரியர் கங்கை அமரன் ,இயக்குனர் ஆர்.வி உதயகுமார் ,பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீ ராம் ,ராஜ்வி ஆகியோர் பங்கேற்கின்றனர் .திரையில் அறிமுகமான நாட்களிலிருந்து எஸ்.பி.பி உடன் நெருங்கி பழகிய திரு.கங்கை அமரன் அவர்கள் தன்னுடன் ஏற்பட்ட அனுபவங்களை சுவாரசியமாக விளக்குகிறார். அதோடு இயக்குனர் ஆர்.வி உதயகுமார் படத்தின் சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய எஸ்.பி.பி பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.இந்த பாடல்கள்களை உடனுக்குடன் அவ்வப்போது பாடகர்கள் ஸ்ரீ ராம், ராஜ்வி இணைந்து பாடவுள்ளனர் .
நேரலையாக நடைபெறுவதால் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் தொலைபேசியில் அழைத்து ,எஸ்.பி.பி குறித்த தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். “என்றென்றும் எஸ்.பி.பி” நிகழ்ச்சி வரும் ஞாயிறு 11.06.2023 அன்று காலை 9:00 மணிக்கு நேரலையில் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .