“பேட் கேர்ள்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!!
இன்று இங்கே இருக்கிறேன் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை நம்பிய வர்ஷாவுக்கு நன்றி. படம் முழுவதையும் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் அந்த அனுபவத்தை நான் உணர்ந்தேன். ஒரு கலைஞராக எனக்குத் தேவையான இடத்தை வர்ஷா கொடுத்தார். அஞ்சலியும் தினமும் என்னை எனது பணி செய்ய சுதந்திரமாக அனுமதித்தார். ஒவ்வொரு காட்சியிலும் அஞ்சலி அழகாக இருந்தார். இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு அதிஷ்டசாலியாக உணருகிறேன், என்றார்.
ஆடை வடிவமைப்பாளர் ஸ்ருதி பேசியபோது,
இந்த படத்தில் என்னையும் வேலை செய்ய வைத்ததற்காக வர்ஷாவுக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தின் ஆடைகள் எளிமையானதாகவும் இயல்பானதாகவும் இருக்க நாம் கவனம் எடுத்தோம். இப்படிப்பட்ட படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி என்றார்.
பாடலாசிரியர் கேபர் வாசுகி பேசியபோது,
“எல்லாருக்கும் வணக்கம். என் பெயர் கேபர் வாசுகி. நான் ஒரு இண்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட். வர்ஷாவை நான் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன்.”
அப்போது அவர் நான் வெற்றிமாறன் சாருடைய துணை இயக்குனர் என்றார். அப்போது, ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்தேன். அதன் பின் அவர் படத்தைப் பற்றி பேசும்போது, இப்படத்தின் குழுவில் பெரிதாக பெண்கள் தான் இருக்கிறார்கள் என்றார்.
அப்போது, நமக்கு பெரிய வேலை ஏதும் இருக்காது என்று நினைத்தேன். அதன்பின், சில நாட்கள் கழித்து ஒரு பாடல் உள்ளது அதை எழுதுகிறீர்களா? என்று கேட்டார். தாராளமாக, என்று சொல்லி தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். “ப்ளீஸ் என்ன அப்படி பாக்காத, அங்கிள் என்ன அப்படி பாக்காத” என்ற பாடலை எழுதியுள்ளேன். ஒரு 16 வயது நிரம்பிய பெண்ணின் பார்வையிலிருந்து இப்பாடலை எழுதியிருக்கிறேன்.
“பேட் கேர்ள்” திரைப்படம் ஒரு கதையாகவே எனக்கு பிடித்திருந்தது, ஒவ்வொரு 10 வருடத்திற்கும் ஒரு படம் அந்த சூழ்நிலையை மையமாக கொண்டு வெளியாகும். அந்த வகையில் இப்படம் இருக்கிறது. செப்டம்பர் 5ம் தேதிக்கு மேல் இப்படத்தை பற்றி பலரிடம் பேசுவேன், வர்ஷா மற்றும் வெற்றிமாறன் சார் அவர்களுக்கு நன்றி, என்றார்.
பாடகர் சுபலாஷினி பேசியபோது,
நான் முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளேன், இந்த வாய்ப்பு கொடுத்த வர்ஷாவுக்கு நன்றி. கேபர் வாசுகி சார் தான் என்னை வர்ஷாவுக்கு அறிமுகம் செய்தார் அவருக்கு நன்றி. முதல் முறையாக அமித் திரிவேடி சார் அவர்களின் இசையில் பாடியது மகிழ்ச்சி என்றார்.
நடிகை சரண்யா பேசியபோது,
வர்ஷா அவர்களுக்கு நன்றி. முக்கிய காரணம், நான் வடசென்னை படத்தில் நடிக்கும் போது, நான் படம் நிச்சயம் அப்படத்தில் இருப்பீர்கள் என்று சொன்னார். நான் அனைவரையும் போல் ஐவரும் பேசுகிறார் என்று நினைத்து அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவர் இப்படத்தில் என்னை அழைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி சாருக்கும் நன்றி. அவர் படத்தில் அதிகம் ஆண்களுக்கு தான் வாய்ப்பு இருக்கும், அப்படி பட்ட அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அஞ்சலி மிகவும் இனிமையானவர், நானும் அவரும் நண்பர்களாக நடித்துள்ளோம். என்னுடைய குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
நடிகை சாந்தி பிரியா பேசியபோது,
“இந்தப் பயணம் எனக்கு எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பதை முதலில் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக பார்க்கிறேன். என் வாழ்க்கைப் பயணத்தில் இதுவரை கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை வழங்கிய வர்ஷாவுக்கு நன்றி. மேலும், வெற்றிமாறன் சாரின் ஆதரவில்லாமல் இன்று நான் இந்த இடத்தில் இருக்க முடியாது. அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிடாமல் விட்டிருந்தால் அதற்காக மன்னிக்கவும்.
இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவள் மிகுந்த வலிமையுள்ள பெண். அதே நேரத்தில் மிக மென்மையான, நகைச்சுவை உணர்வு கொண்டவள். சற்று கவனக்குறைவாகவும், சீரற்ற தன்மையுடனும் இருப்பவள். ஆனால் அவளது அந்தக் குறைகளே அவளை தனித்துவமானவளாக மாற்றுகின்றன.
இந்த படம் எங்களுக்கு ஒரு ஆழ்ந்த உணர்வை வழங்கியுள்ளது. அதேபோல், இது உங்களின் உள்ளங்களையும் தொட்டு, ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் என நான் நம்புகிறேன். நன்றி என்றார்.