அருண் ஈவண்ட்ஸ் வழங்கும் பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி “Prabhu Deva’s Vibe”
இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி “பிரபுதேவாஸ் வைப்”
அருண் ஈவண்ட்ஸ் நடத்தும் பிரபுதேவாவின் “Prabhudeva’s Vibe”
இந்திய திரைத்துறையின் தனித்துவமான கலைஞனாக, இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனக் கொண்டாடப்படும், நடன கலைஞர் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, ( Live in Dance Concert ) இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமனா அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்தும் இந்த நடன நிகழ்ச்சி ” பிரபுதேவாவின் வைப் ” என்ற பெயரில் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி சென்னை, நந்தனதில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த பிரமாண்டமான நடன நிகழ்ச்சியை பிரபல நடிகரும் ,இயக்குனருமான ஹரிகுமார் இயக்குகிறார். இயக்குனர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
அருண் ஈவண்ட்ஸ் நிறுவனம் முன்னதாக தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜாவை வைத்து 6 இன்னிசை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் பிரபல பாடகர்கள் SP பாலசுப்பிரமணியம், சித்ரா, மனோ, கார்த்திக் ராஜா, ஆண்ட்ரியா, ஜொனிடா காந்தி, சித் ஶ்ரீராம், ஷங்கர் மகாதேவன், உன்னி மேனன் முதலான பிபரலங்களை வைத்து, பல இன்னிசை கச்சேரிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த இந்நிறுவனம், தற்போது முதல் முறையாக இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சியை நடத்துகிறது.
அருண் ஈவண்ட்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த நடன நிகழ்ச்சி, இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், வெளிநாடிலிருந்து பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட ஒலி, ஒளி அமைப்புகளுடன், பிரம்மாண்ட மேடையில், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது.
இந்த பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியில், பிரபுதேவாவுடன் 100 நடன கலைஞர்கள் நடனமாட இருக்கிறார்கள்.
திரைத்துறையிலிருந்து பல முன்னணி நடிகர், நடிகையர்கள் இந்நிகழ்வினில் விருந்தினர்களாக கலந்துகொண்டு, பிரபுதேவா மாஸ்டருடன் நடனமாடவுள்ளனர்.
ரஷ்யா மற்றும் கொரியாவை சேர்ந்த பாடகர்கள் மற்றும் நடன கலைஞர்கள் பங்குபெருகிறார்கள்.
இந்தியா முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை paytm insaider , Bookmyshow, Ticket 9 போன்ற செயலிகளில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள் V.M.R.ரமேஷ், அருண், திரு.G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர்.