“PithalaMathi” Movie Review

பித்தளை மாத்தி – செம காமெடி கலகலப்பான படம்

மாணிக்க வித்யா இயக்கத்தில், உமாபதி நடிப்பில் உருவான “பித்தளை மாத்தி” படம், செம காமெடி கலகலப்பான அனுபவத்தை வழங்குகிறது. கதாநாயகன் உமாபதி ராமையா, தண்ணீர் விநியோகத்துடன் வாழ்க்கையை நடத்தி வருபவர். அவர் சலவை நிறுவனம் நடத்தும் நாயகி சம்ஸ்கிருதியை காதலிக்கிறார். நாயகனின் காரணமாக நாயகிக்கு பிரச்சனைகள் உருவாக, அவற்றிலிருந்து அவளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் மையக் கதை.

உமாபதி ராமையா, சண்டைக்காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் உற்சாகமாக செயல்பட்டு, தனது நடிப்பிலும் சிறந்து விளங்குகிறார். நாயகி சம்ஸ்கிருதி, தனது இளமை ததும்பும் அழகால் ரசிகர்களை கவர்ந்து, துள்ளல் நடிப்பால் அவர்களின் மனங்களை கொள்ளையடிக்கிறார். பாடல் காட்சிகளில் மிக அழகாக நடித்துள்ளார். இளைஞர்களின் விருப்பங்களை அதிகமாக ஈர்க்கிறார்.

உமாபதியின் அப்பாவாக நடித்திருக்கும் அவரது உண்மையான அப்பா தம்பி ராமையா, தனது வழக்கமான காமெடியுடன் பயணிக்கிறார். வில்லியாக நடித்த வினுதா லால், அதிரடியான நடிப்பால் அமர்க்களமாகிறார். பால சரவணனின் காமெடி பெரிதாக செல்விக்காதபோதும், சிரிக்க முயற்சிக்கிறார்.

தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி மற்றும் மற்ற கதாபாத்திரங்களான விதுலேகா, சேரன் ராஜ் ஆகியோர் தங்களது வேலையை சரியாக செய்துள்ளனர். சில காட்சிகளில் மதுரை முத்து மற்றும் ஜார்ஜ் காட்சிகள் சிரிப்பை உருவாக்குகின்றன.

மோசஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது. எஸ்.என். வெங்கட் ஒளிப்பதிவில் படத்திற்கு அழகை சேர்த்துள்ளார். பாடல், நடனம், காமெடி ஆகியவற்றை கலந்து, மாணிக்க வித்யா படம் முழுவதும் சுவாரஸ்யமாக வழங்கியிருக்கிறார்.

பித்தளை மாத்தி, வழக்கமான கதையைக் காமெடி மற்றும் கமர்ஷியல் மசாலாவுடன் கலந்து, பொழுதுபோக்காக மாற்றியமைத்துள்ள மாணிக்க வித்யா, பாராட்டுக்குரியவர். தயாரிப்பாளர் சரவணனின் முயற்சியும் வெற்றி பெற வேண்டும். “பித்தளை மாத்தி” இளைஞர்களை திரையரங்கில் கவரும்.

Cast:-Umapathy Ramaiah, Samskruthi, Thambi Ramaiah, Bala Saravanan, Vinudha Lal

Director:-Manika Vidya

Rating..3.3/5