Peppers Tv programm Parambariya Samayal writeup and images -Tamil

“பாரம்பரிய சமையல்”

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பிற்பகல்12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “பாரம்பரிய சமையல்” .

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் மதுரை சமையல், கொங்கு நாட்டு சமையல், செட்டிநாடு சமையல், சேலம் சமையல், நெல்லை சமையல், இஸ்லாமியத் தமிழர் சமையல், கிராமிய தமிழர் சமையல் என பல வகை சமையல் முறைகள் இருக்கின்றன.

இதில் பெரும்பாலானோர் பாரம்பரிய உணவு வகைகளான சிறுதானியங்களான சோளம், கம்பு, குதிரைவாலி, வரகு, ராகி, சாமை, திணை இவற்றையெல்லாம் வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் இவற்றை எப்படி  சமையல் செய்து சாப்பிடுவது என்பது பலருக்கும் தெரியவில்லை என்பதே உண்மை.

ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் இருக்க வேண்டும்.அதேசமயம் எளிமையாக சமையல் செய்வது எப்படி என்பதை சொல்வதுதான் இந்தப் பாரம்பரிய சமையல் நிகழ்ச்சியின் நோக்கமே..இந்நிகழ்ச்சியை ​சசி செழியன் ​ சுவாரஸ்யம் ​குறையாமல் ​சுவை ​பட சமைத்து காட்டுகிறார் .​