குரு ஏ எழுதி இயக்கிய திரைப்படம் “பருத்தி”
கோதண்டம் & கோ மற்றும் லட்சி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு ஏ எழுதி இயக்கிய திரைப்படம் பருத்தி ஏற்கனவே இவர் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் கே பாரதி அவர்களை வைத்து வளையல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ரஞ்சித் வாசுதேவன் இசைய வைக்க ராஜேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இத்திரைப்படம் பெரும் பொருட்செல்வில் படமாக்கப்பட்டுள்ளது இதன் படப்பிடிப்பு ஓசூர் தேன்கனி கோட்டாவில் நடைபெற்று திரைக்கு வர தயாராகியுல்லது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோனியா அகர்வால் மற்றும் திரை பிரபலங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
கிராமத்து வாழ்வியலையும் உணர்வு போராட்டத்தையும் இத்திரைப்படத்தில் கொண்டு வந்துள்ளார் சமூக சிக்கல்களில் சிக்கி தவித்து பால்ய பருவத்தை கடக்கும் சிறார்களின் மனநிலையை எதார்த்தத்துடனும் மிகவும் உணர்வுபூர்வமாக கிராமத்தில் இருந்து வாசம் மாறாமல் இயக்குனர் எடுத்து வந்திருக்கிறார் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் சிறந்த படமாக அமையும்.
நித்திஷ் ஸ்ரீராம்.PRO
