“பரிசு” திரைப்பட விமர்சனம்

ராணுவப் பின்னணியில் உருவாகும் “பரிசு” – பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஓர் சிறந்த படம்!

தேசபக்தி, தந்தை–மகள் பாசம், பெண்மையின் உறுதி — இவற்றை ஒருங்கே இணைத்து உருவாகியிருக்கும் படம் “பரிசு”.
ஸ்ரீ கலா கிரியேஷன்ஸ் சார்பில் கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்தையும் மேற்கொண்டுள்ளார் இயக்குநர் கலா அல்லூரி. திரைப்படக் கல்லூரியில் தொழில்நுட்பம் கற்ற அவருக்கு இது முதல் படைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஐந்து இனிமையான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் கதை நகர்வில் தேவையான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. பாடல்களை எழுதியவர் கே. ராஜேந்திரன் (M.A., MBA).

பரிசு பற்றிச் சொல்வதற்காக இயக்குநர் கலா அல்லூரி கூறுகிறார்:
“ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான தந்தை, மகள் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவை வெளிப்படுத்துகிறார். சிறுவயதிலேயே தேச சேவை என்பது வாழ்க்கையின் பெருமை என்பதை மகளிடம் உணர்த்துகிறார். தந்தையின் ஆசையை நிறைவேற்றும் அந்த மகள், ஒரு பெண்ணாகவும் வீராங்கனையாகவும் எதிர்கொள்ளும் சவால்களையும் வெற்றிகளையும் சொல்லுகிறது இந்த படம். ‘மகளிடமிருந்து தந்தைக்கு கிடைக்கும் உண்மையான பரிசு — தேச சேவை’ என்பதே இதன் மையக் கருத்து,” என்கிறார்.

பெண்கள் இன்று அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவது போலவே, இந்தப் படத்தின் நாயகி ஜான்விகா ராணுவ வீராங்கனையாக சிறப்பாக நடித்துள்ளார். கல்லூரி மாணவி, விவசாயி, ராணுவ வீராங்கனை என மூன்று வேறு தளங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சண்டைக் காட்சிகளில் கூட டூப் இல்லாமல் நடித்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய வேடங்களில் ஜெய் பாலா, கிரண் பிரதீப், ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்ன பொண்ணு, பேய் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ், இசை – ராஜீஷ், எடிட்டிங் – சி.எஸ். பிரேம்குமார், சண்டைக் காட்சிகள் – கோட்டி-இளங்கோ, நடனம் – சுரேஷ்சித், பின்னணி இசை – சி.வி. ஹமரா, வடிவமைப்பு – அஞ்சலை முருகன். பாடகர்கள் சின்மயி, சக்திஸ்ரீ கோபாலன், மானசி, வந்தனா சீனிவாசன், ரஞ்சித் ஆகியோர் பாடியுள்ளனர்.

பெண்களை காட்சிப் பொருளாக அல்ல, சாதனைப் பெண்ணாகக் காட்டும் நல்ல நோக்குடன் உருவாகியுள்ள “பரிசு” திரைப்படம் — பெண்களின் வலிமை, நாட்டுப்பற்றும், உறுதியும் நிறைந்த நல்லெண்ணப் படம் என்பதில் ஐயமில்லை.

தயாரிப்பாளர்,இயக்குனர்: கலா அல்லூரி

மதிப்பீடு....3.5/5

PRO: சக்தி சரவணன்

vrcs