‘ஒனிடா ரீவைர்டு’: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் – ன் வளர்ச்சி திட்டம் 100-அங்குல பிரம்மாண்ட QD Mini LED டிவி அறிமுகம்!

~சென்னை மற்றும் தமிழக சந்தைகளில் பிரீமியம் தயாரிப்புகள், புதுமை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றின் மூலம் இந்தியா முழுவதிலும் விரிவாக்கத்தை இலக்காக கொண்ட வளர்ச்சி உத்தி~

தொடக்கத்தைக் குறிப்பதோடு, மிகவும் வலிமையான, எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்குவதற்கான எங்களது தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. பிரீமியம் தயாரிப்புகள், வலுவான ரீடெய்ல் வர்த்தகம் மற்றும் சேவைத் திறன்கள் மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்கள் மூலம் எங்களது நிலைமாற்றத்தை நாங்கள் துரிதப்படுத்தும்போது, சென்னை மற்றும் தமிழ்நாடு சந்தைகள் எங்களது வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். தரத்தை விரும்பும் நுகர்வோர் மற்றும் வலுவான ரீடெய்ல் வர்த்தகச் சூழலைக் கொண்டுள்ள இப்பிராந்தியம், தொடர்ந்து எங்களது வலுவான சந்தைகளில் ஒன்றாக விளங்கி வருவதால், எதிர்கால முதலீடுகளுக்கான முக்கிய மூலோபாய முன்னுரிமையாக திகழ்கிறது. எங்களது ப்ரீமியம் தயாரிப்பான 100-அங்குல QD Mini LED டிவியின் அறிமுகம், இந்தியாவிலுள்ள எங்களது வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்கும்; அத்துடன் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கான எங்களது அர்ப்பணிப்பின் எடுத்துக்காட்டாகவும் இந்த அறிமுகம் திகழ்கிறது” என்றார்.

 

இந்த அறிமுகம் குறித்து ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி திரு. ஃபாரூக் பெய்க் கூறுகையில், “பெரிய திரைகள், தியேட்டர் போன்ற அதிவேக சினிமா அனுபவம் மற்றும் வீட்டுத் திரை அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஸ்மார்ட்டான தொழில்நுட்பங்களை நுகர்வோர்கள் இப்போது நாடுகின்றனர். இதுவே பிரீமியம் டிவிகள் பிரிவை வடிவமைத்து வருகிறது. வாடிக்கையாளர்களின் இந்த மாறிவரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிநவீன திரைத் தொழில்நுட்பம், அசாத்தியமான காட்சித் தரம் மற்றும் ஸ்மார்ட்டான செயல்பாடு ஆகியவற்றை ஒன்றிணைத்து எங்களது புதிய 100-அங்குல QD Mini LED டிவியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த அறிமுகம், தயாரிப்புகளில் தொடர்ச்சியான புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்வதில் எங்களது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இன்றைய நவீன யுகத்தில் நுகர்வோரின்

தேவைகளுக்கேற்ப, எளிதில் அணுகக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஒனிடாவின் பிரீமியம் தயாரிப்புகளின் அணிவரிசையை மேலும் வலுவாக்கியிருக்கிறது” என்றார்.

ஒனிடா 100-inch QD Mini LED டிவிமுக்கிய அம்சங்கள்

அம்சம்விவரக்குறிப்பு
திரை100-இன்ச் QD மினி எல்இடி
லோக்கல் டிம்மிங்1,600 Full Array Local Dimming Zones
பிரகாசம்550 Nits Peak Brightness
ரெஃப்ரெஷ் ரேட்144 Hz
பிராசஸர்பென்டோனிக் பிராசஸர்
பிக்ச்சர் தொழில்நுட்பம்Dolby Vision, HDR10 & MEMC
ஒலி (ஆடியோ)KY தண்டர் 1000 வாட்ஸ் PMPO டால்பி அட்மாஸ்
கேமிங்KY தண்டர் உடன் கேம் மோட்
யாருக்கு ஏற்றதுபிரீமியம் வீடுகள், ஆடம்பர குடியிருப்புகள், கேமிங் பிரியர்கள் மற்றும் ஹோம் தியேட்டர் அனுபவத்திற்கு ஏற்றது

ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் குறித்து (ONIDA-RE | 751009 | INE831A20010)

1981-இல் தொடங்கப்பட்ட ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (முன்னர் MIRC எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்), அதன் முன்னோடி கலர் டெலிவிஷன் தயாரிப்புகள் மற்றும் புகழ்பெற்ற “டெவில்” விளம்பரப் பிரசாரத்தின் மூலம் இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முக்கியப் பெயராக மாறியது. வாஷிங் மெஷின்கள், ஏர் கண்டிஷனர்கள், மைக்ரோவேவ் அவன்கள், பிளாட் பேனல் டிவிகள், மொபைல் ஹேண்ட்செட்டுகள் மற்றும் எல்இடி விளக்குகள் உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவுகளிலும் தனது வணிகத்தை ஒனிடா விரிவுபடுத்தியது. தற்போது, 15 கிடங்குகள் மற்றும் நாடு தழுவிய விநியோக வலையமைப்புடன், இந்தியாவின் போட்டி நிறைந்த நுகர்வோர் சாதனங்கள் சந்தையில் புத்தாக்க அடிப்படையிலான வளர்ச்சி மற்றும் தனித்துவமான தயாரிப்புகளை வழங்குவதில் ஒனிடா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.