Oben Electric all set for its entry into the E2W segment with its first high performance electric motorcycle
Focuses on sustainable world-class electric mobility solutions, Made-in-India ~
Oben Electric, one of India’s most awaited E2W (electric two-wheeler) start-up focussing on building indigenous products for India & global markets, announced its entry into the electric 2-wheeler segment with upcoming launches of their products. With 4 vehicles in the pipeline, the company intends to launch a new product every 6 months over the next 2 years.
Oben Electric’s first high performance electric motorcycle is all set for its market launch in Q1 of 2022. Oben Electric’s in-house capability to design, develop and manufacture E2Ws enables it to deliver high performing and reliable, products. This capability is fuelled by hands-on expertise, of the team having prior experience in successfully designing, developing, manufacturing and selling E2Ws. With such experience at hand and focus on R&D, Oben Electric has been successful in creating their first product, an electric motorcycle with superior specs and a world-class design.
Founders, Madhumita and Dinkar Agrawal, bring with them experience of over 6 years in the Electric Vehicle Domain. Oben’s core team also consists of passionate team members with hands-on 6+ years of experience all along the E2W life cycle.
Mr. Dinkar Agrawal, Co-Founder, Oben Electric, said, “We have raised a total of $2.5 million through VC funding, which is the highest seed round raised by an E2W startup. This helps us innovate with a focus on consumer safety and delight. Our aim is to enable Indian consumers to make the shift from ICE to EV. Over the next few years, we intend to be a global player with our specialized products.”
“Oben Electric is geared-up with multi-level testing, durability, safety & connectivity to address a white space in the segment,” said, Ms. Madhumita Agrawal, Co-Founder, Oben Electric. “We have brought together a core team of experts who specialize in every aspect of the E2W life cycle. This has enabled us to go beyond assembling of vehicles to truly creating a product from scratch for the Indian consumer. We have researched pain-points consumer’s face, while riding or purchasing E2Ws and have created solutions accordingly. We are excited to reach the launch phase of our journey and are confident that our first product will be well received by the Indian consumer”, added Ms. Agrawal. Oben Electric, backed by We Founders Circle, recently received fresh funding from Mr. Krishna Bhupal, Board Member GVK Power & Infra, Mr. Shajikumar Devakar, Executive Director IIFL Wealth, & other investors. The start-up has now been oversubscribed 3x times making it one of the largest seed rounds raised by an E2W startup. With deep IP and a patent portfolio of 18 patents, Oben Electric represents the future consumers need, today.
ஓபென் எலக்ட்ரிக் – ன் முதல் தயாரிப்பான உயர் செயல்திறன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகிறது.
~ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் வழியாக உலகத்தரத்தில் நிலைக்கத்தக்க மொபிலிட்டி தீர்வுகள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது ~
இந்திய மற்றும் உலக சந்தைகளுக்காக சொந்தமாக உள்நாட்டிலேயே சுயமாகத் தயாரிக்கப்படும் தயாரிப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் நிறுவனமான ஓபென் எலக்ட்ரிக், அதன் தயாரிப்புகளை விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதன் மூலம் எலக்ட்ரிக் -இருசக்கர வாகனத்துறையில் அதன் நுழைவை அறிவித்திருக்கிறது. ஓபென் எலக்ட்ரிக், இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்ற E2W (மின்சக்தியில் இயங்கும் இரு-சக்கர வாகனம்) ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். 4 வாகனங்கள் தயாரிப்பு செயல்முறையின் கீழ் தற்போது இருக்கும் நிலையில் அடுத்த 2 ஆண்டுகள் காலஅளவில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ஓபென் எலக்ட்ரிக் முதல் உயர் செயல்திறன் மோட்டார்சைக்கிள் முதல் காலாண்டின்போது சந்தை அறிமுகத்திற்கு முற்றிலும் தயார்நிலையில் இருக்கிறது. மின்சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வடிவமைக்க, உருவாக்க, தயாரிக்க அவசியமான அனைத்து திறன்களையும் ஓபென் எலக்ட்ரிக் நிறுவனத்திற்குள்ளேயே கொண்டிருப்பது, அதிக செயல்திறன்மிக்க, நம்பகமான தயாரிப்புகளை தயாரித்து வழங்க திறனுள்ளதாக ஆக்கியிருக்கிறது. E2Wக்களை வெற்றிகரமாக வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்து மற்றும் விற்பனை செய்வதில் முன்அனுபவம் உள்ள குழுவினரின் சிறப்பான நிபுணத்துவம், இதன் செயல்திறனை இன்னும் வலுவாக மேம்படுத்தியிருக்கிறது. செழுமையான அனுபவம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மீது சிறப்பு கவனம் மூலம் மிக உயர்வான அளவீடுகள் மற்றும் உலகத்தரத்திலான வடிவமைப்புடன் தங்களது முதல் தயாரிப்பான ஒரு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை வெற்றிகரமாக ஓபென் எலக்ட்ரிக் உருவாக்கியிருக்கிறது.
இதன் நிறுவனர்களான மதுமிதா மற்றும் தினகர் அக்ரவால், மின்சக்தியில் இயங்கும் வாகனத்துறையில் 6 ஆண்டுகளுக்கும் கூடுதலான சிறப்பான அனுபவத்தை இதற்கு பயன்படுத்தியிருக்கின்றனர். E2W வாழ்க்கை சுழற்சி முழுவதிலும் நேரடியான, 6+ ஆண்டுகள் அனுபவம் உள்ள துடிப்பான குழு உறுப்பினர்கள் ஓபென் – ன் மையக்குழுவில் இடம்பெற்றிருப்பது இதற்கு வலிமை சேர்க்கிறது.
ஓபென் எலக்ட்ரிக் – ன் இணை – நிறுவனர் திரு. தினகர் அக்ரவால் இதுபற்றி கூறியதாவது: “வென்ச்சர் கேப்பிட்டல் நிதி செயல்முறை வழியாக, மொத்தத்தில் $2.5 என்ற தொகையை நாங்கள் திரட்டியிருக்கிறோம். ஒரு E2W ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் திரட்டப்பட்ட மிக அதிக வித்து மூலதனம் இதுவே. நுகர்வோர் பாதுகாப்பு, அவர்களது பெருமகிழ்ச்சி மற்றும் திருப்தி மீது சிறப்பு கவனத்துடன் புத்தாக்கம் செய்வதற்கு இது எங்களுக்கு உதவுகிறது. இந்திய நுகர்வோர்கள் ICE வாகனங்களிலிருந்து EV -க்கு (எலக்ட்ரிக் வாகனங்கள்) மாறுவதற்கு ஆர்வத்தையும், தூண்டுதலையும் தந்து ஏதுவாக்குவதே எமது நோக்கமாகும். அடுத்த சில ஆண்டுகள் காலஅளவிற்குள் எமது தனிச்சிறப்பான தயாரிப்புகள் மூலம் உலகளவில் செயல்படும் ஒரு பெருநிறுவனமாக வளர்ச்சி காண்பது எமது நோக்கமாகும்.”
“இப்பிரிவில் இருக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்ள பல்வேறு நிலைகளில் பரிசோதனை, நீடித்து உழைக்கும் நிலைப்புத்தன்மை பாதுகாப்பு மற்றும் இணைப்புவசதி ஆகிய அம்சங்களின் மூலம் ஓபென் எலக்ட்ரிக் இச்சந்தையில் கால்பதிக்க முழு தயார்நிலையில் இருக்கிறது.” என்று ஓபென் எலக்ட்ரிக் – ன் இணை – நிறுவனர் மிஸ். மதுமிதா அக்ரவால் கூறினார். “E2W வாழ்க்கை சுழற்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்பு திறன் கொண்டிருக்கின்ற நிபுணர்கள் அடங்கிய ஒரு மைய செயற்குழுவை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். வாகனங்களை ஒன்றுசேர்த்து அசெம்பிள் செய்வது என்பதையும் கடந்து, இந்திய நுகர்வோர்களுக்கு அடிப்படை அம்சத்திலிருந்து ஒரு அற்புதமான தயாரிப்பை உருவாக்க எங்களை ஏதுவாக்கியிருக்கிறது. E2W வாகனங்களை வாங்கும்போது அல்லது அதனை ஓட்டும்போது நுகர்வோர்கள் எதிர்கொள்கின்ற சிரம அம்சங்கள் குறித்து நாங்கள் ஆராய்ச்சி செய்து அதற்கேற்ப சரியான தீர்வுகளை உருவாக்கியிருக்கிறோம். எமது பயணத்தின் தொடக்க அறிமுக கட்டத்தை எட்டியிருப்பது எங்களுக்கு உற்சாகமளிக்கிறது. எமது முதல் தயாரிப்பு இந்திய நுகர்வோரால் சிறப்பான வரவேற்பை பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று மிஸ். அக்ரவால் மேலும் தெரிவித்தார்.
வி ஃபவுண்டர்ஸ் சர்க்கிள் – ன் பின்புல ஆதரவு பெற்றிருக்கும் ஓபென் எலக்ட்ரிக் GVK பவர் & இன்ஃப்ரா நிறுவனத்தின் இயக்குனர் குழு உறுப்பினர் திரு. கிருஷ்ண பூபால், IIFL வெல்த் நிறுவனத்தின் செயலாக்க இயக்குனர் திரு. ஷாஜிகுமார் தேவகர் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து புதிய நிதியளிப்பை சமீபத்தில் பெற்றிருக்கிறது. ஒரு E2W ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் திரட்டப்பட்ட மிகப்பெரிய வித்து சுற்றுகளுள் ஒன்றாக இதனை ஆக்கும் வகையில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு 3 மடங்கு அதிக சப்ஸ்கிரிப்ஷன் கிடைத்திருக்கிறது. ஆழமான IP மற்றும் 18 உரிமங்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றின் மூலம் நுகர்வோர்களின் எதிர்கால தேவையை இன்றே சிறப்பாக பூர்த்திசெய்து வழங்கும் நிறுவனமாக ஓபென் எலக்ட்ரிக் திகழ்கிறது.