ஈழத்தில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.
ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் TJ.பானு இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி இலங்கை – யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது டப்பிங் பணிகள் ஆரம்பித்திருப்பதாக படக்குழுவினர் அறியத்தருகின்றனர். அந்தோனி திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்குகின்றனர். ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலைவளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.… Continue reading "ஈழத்தில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்."









