New-age skilling platform, ‘Reliance Foundation Skilling Academy’ launched by MoS Jayant Chaudhary

• Open to youth seeking skilling, reskilling and upskilling for successful careers
• Simplifies job connect with new-age technology
• Forward-looking platform facilitates mentorship by industry experts
• AICTE collaboration to enhance reach and impact of the Reliance Foundation Skilling Academy

In a step forward to shaping India’s tomorrow, Shri Jayant Chaudhary, Minister of State (Independent  Charge), Minister of Skill Development and Entrepreneurship, and Minister of State, Ministry of Education,  Government of India, launched the Reliance Foundation Skilling Academy, a platform  dedicated to preparing India’s youth for jobs of the future.

The platform was launched at a national conference on ‘Empowering Youth for the Jobs of the Future’,  organized by Reliance Foundation in collaboration with the National Skill Development Corporation  (NSDC) that brought together leading voices from across government, policy, corporate philanthropy,  industry, civil society, and academia to discuss skilling India’s youth.

Speaking at the launch, Shri. Jayant Chaudhary, Hon’ble Minister of State (Independent Charge), Ministry  of Skill Development and Entrepreneurship, said, “India’s youth stand at the crossroads of  immense opportunities, and the collaboration between Reliance Foundation and NSDC marks a significant  milestone in empowering them for the jobs of the future. The launch of the Reliance Foundation Skilling  Academy, a joint platform, is a testament to this commitment, ensuring our youth are equipped with the  skills needed to succeed in tomorrow’s workforce. By investing in skilling, we are not only building a  stronger workforce but also shaping a generation of leaders ready to take on global challenges. This initiative reflects our dedication to ensuring that every young person has access to the tools and training  they need to thrive in an increasingly competitive world. Together, we are laying the foundation for a  brighter, more inclusive future for all.”

Calling attention to the future of skilling in a rapidly-evolving employment landscape, Mr. Jagannatha  Kumar, CEO of Reliance Foundation, said, ” Enabling young people to achieve their aspirations is a part of  the core philosophy of Reliance Foundation. Reliance Foundation Skilling Academy is a step towards  fulfilling those aspirations and preparing youth for the jobs of the future. By harnessing technology, the  platform maximizes its reach and accessibility. It bridges the gap between education and employment to  equip our young people with the skills they need to succeed in a dynamic landscape of jobs and  entrepreneurship. Furthermore, the Reliance Foundation Skilling Academy plays a vital role in fostering a collaborative ecosystem by forging partnerships and uniting key stakeholders to drive innovation in skill  development, ensuring that India’s youth are empowered in this rapidly changing economic environment.”

The Reliance Foundation Skilling Academy www.rfskillingacademy.com is an open-to-all platform that  offers future-ready courses for skill building, personalized expert guidance, and facilitates industry  linkages for meaningful employment. It is designed to support an individual at any and every stage of their  career by facilitating skilling, upskilling, and reskilling, including with unique user-specific recommendations and mentoring through industry leaders. Through the platform, Reliance Foundation  aims to empower over 6 lakh young Indians in the next one year alone.

Reliance Foundation and the All India Council for Technical Education (AICTE) have agreed to collaborate  on the Reliance Foundation Skilling Academy to enhance the reach and impact of future-oriented skill  courses developed on the platform, thereby supporting the Skill India Mission. By working together, the  two organisations will ensure that these courses are accessible to students enrolled in higher educational  institutions affiliated to AICTE across the country, significantly boosting their employability and readiness  for the future workforce.

The national conference included key participants from across the country, including Prof. T.G.Sitharam,  Chairman, AICTE, Mr. Ved Mani Tiwari, CEO, NSDC, and others, on shaping India’s skilling landscape  through strategies like strengthening curricula to include emerging technologies and 21st century skills,  integrating mentorship into formal education, vocational training, and workforce development initiatives.  The conference also brought out the need to prepare youth for jobs in areas featuring new and emerging  technologies and strengthen skilling initiatives while ensuring equity.

A publication by Reliance Foundation, Building India’s Future Young Talent: Stories of Transformation, a  compilation of stories of individuals from across India, whose lives were transformed through skilling initiatives, was also launched at the conference.


ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஸ்கில்லிங் அகாடமி: புதுயுக திறன் மேம்பாடு  செயல்தளம்!

மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தொடங்கி வைத்தார்

*வெற்றிகரமான கரியர்களுக்காக திறன் பெறுதல், மறுதிறனாக்கம் மற்றும் திறன்  உயர்த்தலை பெற விரும்புகிற இளையோருக்கானது.
*புதுயுக-தொழில்நுட்பத்துடன் வேலைவாய்ப்பிற்கான பிணைப்பை எளிதாக்குகிறது.
*தொழில்துறையின் நிபுணர்களால் வழிகாட்டப்படுதலை ஏதுவாக்க முற்போக்கு சிந்தனையுள்ள செயல்தளம்.
*ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஸ்கில்லிங் அகாடமி-ன் செயற்பரப்பையும், தாக்கத்தையும் மேம்படுத்த AICTE உடன் ஒத்துழைப்பு

இந்தியாவின் வலுவான எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முன்னேற்ற நடவடிக்கையாக, எதிர்காலத்தின் வேலைவாய்ப்புகளுக்காக இந்தியாவின்  இளையோரை தயார் செய்வது என்ற குறிக்கோளைக் கொண்டிருக்கும் ஒரு  செயல்தளமான ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஸ்கில்லிங் அகாடமியை இந்திய அரசின்  கல்வித்துறையின் கீழ்வரும் திறன் உருவாக்கம் மற்றும் தொழில்முனைவு திறனுக்கான  மத்திய இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி தொடங்கி வைத்தார்.

தேசிய திறன் மேம்பாடு கழகத்தின் (NSDC) ஒத்துழைப்போடு ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனால் ‘எதிர்கால வேலைவாய்ப்புகளுக்காக இளையோர் திறனதிகாரம்  பெறச்செய்வது’ என்ற தலைப்பு மீது நடைபெற்ற தேசிய கருத்தரங்கு நிகழ்வில்  இச்செயல்தளம் தொடங்கப்பட்டது. இந்திய இளையோரை திறனுள்ளவர்களாக  ஆக்குவது குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்கம், கொள்கை  வகுப்பு, கார்ப்பரேட், அறக்கொடை, தொழில்துறை, குடிமை சமூகம் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பிரபல ஆளுகைகள் கலந்து கொண்டனர். இத்தொடக்க  விழா நிகழ்வில் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி, “திறன் பெறுவதை விரும்பத்தக்கதாக ஆக்குவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிற கற்றல் கலாச்சாரத்தை பேணி வளர்ப்பது எமது நோக்கமாகும். இந்தியாவின்  இளையோரை திறனதிகாரம் பெற்றவர்களாக ஆக்குவதற்கு நமது மாண்புமிகு இந்திய  பிரதமரின் தொலைநோக்கு திட்டத்திற்கு இணக்கமான இந்த புதுமையான  செயல்தளத்தை இன்று தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 21-வது  நூற்றாண்டு திறன்களை நமது இளைஞர்களுக்கு கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளில் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஸ்கில்லிங் அகாடமி என்பது மற்றும் ஒரு  சிறப்பான முன்னேற்ற நடவடிக்கையாகும். இக்கருத்தரங்கு நிகழ்வும், திறன்மிக்க  பணியாளர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது இளையோரின் வாழ்க்கைத்  தரத்தை மேம்படுத்துவது மற்றும் நமது ஒட்டுமொத்த கூட்டுமுயற்சிகளை இன்னும்  பெரிதாக்குவது என்ற மூன்று குறிக்கோள்களை அடைவதற்கு புத்தாக்கமான  யோசனைகளையும், ஆலோசனைகளையும் பிரபல சிந்தனையாளர்களிடமிருந்து  கேட்டு செவிமடுப்பதற்கு இக்கருத்தரங்கு நிகழ்வும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்”  என்று குறிப்பிட்டார்.

வேகமாக மாற்றம் கண்டு வருகிற வேலைவாய்ப்பு சூழல் திறனாக்கத்தின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துவதை வலியுறுத்திய ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன்-ன்  தலைமை செயலாக்க அதிகாரி திரு. ஜெகனாத குமார், “இளம் நபர்கள் அவர்களது  கனவுகளையும், பெரு விருப்பங்களையும் நிஜமாக்குமாறு ஏதுவாக்குவது, ரிலையன்ஸ்  ஃபவுண்டேஷன்-ன் மைய கோட்பாட்டின் ஒரு பகுதியாகும். இந்த விருப்பங்களை பூர்த்தி  செய்வது என்ற பயணத்தில் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஸ்கில்லிங் அகாடமி என்பது  ஒரு முன்னோக்கிய நடவடிக்கையாகும்; எதிர்காலத்தின் வேலைவாய்ப்புகளுக்கு  இன்றைய இளையோரை தயார் செய்வதே இதன் நோக்கம். தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்துவதன் வழியாக தனது செயற்பரப்பையும், அணுகுவசதியையும்  இத்தளம் பெரிதாக்குகிறது. வேலைவாய்ப்பு சூழல் மற்றும் தொழில்முனைவில் வெற்றி  பெறுவதற்கு அவர்களுக்கு தேவையான திறன்களையும் நமது இளையோர்கள்  பெறுமாறு செய்வதற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு இடையிலான இடைவெளியை இத்தளம் நிரப்பும். இதற்கும் மேலாக, திறன் உருவாக்கம் மற்றும்  மேம்பாட்டில் புத்தாக்கத்தை முன்னெடுக்க முக்கிய அக்கறை பங்காளர்களை  ஒருங்கிணைப்பது மற்றும் கூட்டாண்மைகளை மேற்கொள்வதன் வழியாக  ஒத்துழைப்புமிக்க சூழலமைப்பை வளர்ப்பதில் இந்த அகாடமி ஒரு முக்கிய  பங்காற்றும். மிக வேகமாக மாறிவரும் பொருளாதார சூழலில் இந்தியாவின் இளைஞர்கள் சிறப்பான திறனதிகாரம் பெற்றவர்களாக ஜொலிப்பதை இது உறுதி  செய்யும்” என்று கூறினார்.

திறன் உருவாக்கம், தனிப்பயனாக்கப்பட்ட நிபுணர்களின் வழிகாட்டலுக்கு எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு கல்வி திட்டங்களை வழங்குகிற மற்றும்  அர்த்தமுள்ள வேலைவாய்ப்பிற்கு தொழில்துறையோடு பிணைப்புகளை ஏதுவாக்குகிற  அனைத்து நிறுவனங்கள் மற்றும் செயல்தளங்கள், தாராளமாக பயன்படுத்திக்  கொள்வதற்கான தளமாக ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஸ்கில்லிங் அகாடமியின்  வலைதளமான www.rfskillingacademy.com செயல்படும். கரியரின் எந்தவொரு மற்றும் அனைத்து நிலையிலும் திறனாக்கத்தை, திறன் உயர்த்தலை மற்றும்  மறுதிறனாக்கத்தை ஏதுவாக்குவதன் மூலம் ஒரு தனிநபருக்கு ஆதரவளிக்கும்  நோக்கத்தோடு இந்த தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பயனாளிக்கே உரிய  தனித்துவமான பரிந்துரைகள் மற்றும் தொழில்துறையின் தலைவர்கள் வழியாக  வழிகாட்டல், சேவைகள் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். இந்த செயல்தளத்தின்  வழியாக அடுத்த ஓராண்டில் மட்டும் 6 இலட்சத்திற்கும் அதிகமான இளம் இந்தியர்கள்  திறனதிகாரம் பெறச் செய்வது என்ற நோக்கத்துடன் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் செயல்படும்.

இத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள எதிர்காலத்திற்குரிய திறன் கல்வித்திட்டங்களின் செயற்பரப்பையும் மற்றும் தாக்கத்தையும் மேம்படுத்த ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன்  ஸ்கில்லிங் அகாடமியோடு ஒத்துழைக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி  கவுன்சிலும் (AICTE) மற்றும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனும் மனமுவந்து  முன்வந்திருக்கின்றனர்; இதன் மூலம் ஸ்கில் இந்தியா என்ற மாபெரும் திட்டத்திற்கு  ஆதரவு வழங்கப்படும். நாடெங்கிலும் AICTE உடன் இணைக்கப்பட்டுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எளிதில் அணுகிப் பெறக்கூடியதாக இந்த திறனாக்க கல்வி திட்டங்கள் இருப்பதை, ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் இந்த  இரு நிறுவனங்களும் செயல்படும். எதிர்கால பணியாளர்களாக உருவாகக்கூடிய இந்த  மாணவர்களின் பணிக்கு தயார் நிலையிலும் மற்றும் பணியமர்த்தப்படும் திறனையும்  இப்பயிற்சி திட்டங்கள் கணிசமாக உயர்த்தும்.

நடைபெற்ற இந்த தேசிய கருத்தரங்கு நிகழ்வில் AICTE-ன் செயலாளர் உட்பட நாடெங்கிலுமிருந்து முக்கியமான ஆளுமைகள் பங்கேற்றனர். புதிதாக உருவாகிவரும்  தொழில்நுட்பங்களையும், 21-வது நூற்றாண்டு திறன்களையும் உள்ளடக்கும் வகையில்  பாடத்திட்டத்தை வலுப்படுத்துவது, முறைசார்ந்த கல்வியில் நிபுணரின் வழிகாட்டலை  ஒருங்கிணைப்பது, தொழில்முறை சார்ந்த பயிற்சி, பணியாளர்களுக்கான மேம்பாடு  முன்னெடுப்புகள் போன்ற செயல்உத்திகளின் வழியாக இந்தியாவின் திறன்  உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு தளத்தை வடிவமைப்பது குறித்து இந்த மாநாடு விவாதித்தது. புதிய மற்றும் உருவாகி வரும் தொழில்நுட்பங்களின் பணிகளுக்கு  இளைஞர்களை தயார் செய்யும் தேவையையும் இக்கருத்தரங்கு வலுவாக  சுட்டிக்காட்டியது.

எதிர்காலத்தில் இந்தியாவின் இளம் திறமைசாலிகளை உருவாக்குவது: திறன் உருவாக்கம் மற்றும் மேம்பாடு முன்னெடுப்பின் வழியாக சிறப்பான முன்னேற்றத்தை  பெற்றிருக்கிற இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்களின் சாதனை கதைகளின்  தொகுப்பான ‘Stories of Transformation’ என்ற தொகுப்பு நூலும் இக்கருத்தரங்கு நிகழ்வில்  வெளியிடப்பட்டது.

Screenshot