“ஆல் பாஸ் ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !
சூர்யா கார்த்தி பெரிய நடிகர்கள் அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள் ” ஆல்பாஸ் ” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூரலிகான் காட்டம் !
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மைதீன்.
‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இனறு நடைபெற்ற இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மோகனா பேசியதாவது..,
“என்னால் கேமரா முன்னாடி நின்று நடிக்க முடிகிறது. ஆனால் எல்லாரும் முன்னாடி நின்று பேசுவது என்றால் ரொம்பவே பதட்டமாகவும், நடுக்கமாகவும் இருக்கிறது. அதனால் மன்னித்துக்கொள்ளுங்கள். இங்கு இந்த விழாவிற்கு வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி.
நிஜமாகவே இந்தப் படம் எங்களுக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு, எங்களுக்கு நல்லபடியாக ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை பார்த்து எங்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்” நன்றி.
இயக்குநர் மைதீன் பேசியதாவது..,
இன்று இந்த விழாவிற்கு வருகை தந்த ஐயா ஆர் வி உதயகுமார், இயக்குநர் விக்ரமன், அண்ணன் மன்சூர் அலிகான் ஆகிய அனைவருக்கும் நன்றி.
உதவி இயக்குநர்களின் வலி அவர்களின் அடையாளம் சினிமாவில் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கான வாய்பு கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கான அடையாளம் கிடைக்கும். பலர் இன்னும் அந்த வாய்பில்லாமல் இருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் துஷ்யந்த் நடிக்க வைக்க அணுகியபோது, அவர் அப்பா தான் சொல்வார் என்றார். எனக்கு அப்போது ஜெயப்பிரகாஷ் சார் தான் அப்பா என்பது தெரியாது. ஜெயப்பிரகாஷ் சாரை சந்தித்து முழு கதையை சொன்னேன். அவர் ஒரு தயாரிப்பாளர், அவர்களின் வலி புரிந்து அக்கறையுடன் அறிவுரை சொல்வார் என நினைத்து முழு கதை சொன்னேன்.
கதை கேட்டு அழகர் கேரக்டர் யார் செய்கிறார்கள் என்று கேட்டார். நான் உங்களை கூட நினைத்திருந்தேன் ஆனால் சம்பளம் பெரிதாகிவிடும் என்றேன், ஆனால் சம்பளம் ஒரு விஷயமே இல்லை நான் நடிக்கிறேன் என்று வந்தார் அவர் மனதுக்கு என் பெரிய நன்றி.
இம்மாதிரியான ஆளுமைகள், உதவிகளால் தான் இப்படம் சாத்தியமானது. நம் தேடலை எப்போதும் நிறுத்தக்கூடாது. என் தயாரிப்பாளர் மோகனா மேடம் அவர்களுக்கு பெரிய நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்களை திருப்திப்படுத்தும். இப்படத்தில் உழைத்த நடிகர் நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..,
“‘ஆல் பாஸ்’ படத்தின் டிரெய்லரும், பாடல்களும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கின்றன. படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.
படத்தின் ஹீரோயின் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறார். அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஹீரோ எனது நண்பர் ஜெயப்பிரகாஷ் அவர்களின் மகன். ஆனால், படத்தில் அவர் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
‘ஆல் பாஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” நன்றி.
“இந்தப் படத்தின் குழுவைப் பற்றி எனக்கு பெரிதாகத் தெரியாது. இந்தப் படத்தின் இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தபோது, இயக்குநர் சேரனுக்கு அழைப்பிதழ் வைத்தார். அதேபோல் எனக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது நான், ‘யார் ஹீரோ?’ என்று கேட்டேன். அதற்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் அவர்களின் மகன் என்று கூறினார்.
படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் இருந்தது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஆல் பாஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது..,
‘ஆல் பாஸ்’ அற்புதமான படம், ஜேம்ஸ் வசந்தன் எனக்கு பிடித்த கலைஞர். நீட் மாணவர்களை 11,12 ஆம் வகுப்பிலேயே அந்த சப்ஜெக்டை படிக்க வையுங்கள் தைரியமாக பேசினார். அவருக்கு என் நன்றிகள்.
நீங்களே பாருங்கள். உடனே வாட்ஸ்அப், மீடியா என்று எதை எதையோ வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி தப்பாக எழுதுகிறார்கள். எங்களுக்கு வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ, கீழே போய் உட்கார்ந்து கொண்டு, ‘உன் பையன் கஞ்சா அடிக்கிறான், பைத்தியக்காரன்’ என்று என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
“இயக்குநர் ஆர் வி உதயகுமார் அனைவரையும் பற்றி மிக அழகாகப் பேசியதோடு, இந்தப் படத்தில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் இணைந்து பணியாற்றிய விதத்தை எடுத்துக்காட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்த படக்குழுவிடமும் ஒரு நல்ல வைப்ரேஷனும், எனர்ஜியும், சிறப்பான ஒருங்கிணைப்பும் இருந்திருக்கிறது.
குறிப்பாக குறுகலான தெருக்கள், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள் என சவாலான இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அந்தச் சவால்களை படக்குழுவினர் சிறப்பாக எதிர்கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
நாயகி ஜனனி உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள அனைவருக்கும், வினோதினி உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ‘ஆல் பாஸ்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும்” என்றார். நன்றி. வணக்கம்”
நடிகை ஜனனி பேசியதாவது..,
நடிகர் துஷ்யந்த் பேசியதாவது..,
“முதலில் விக்ரமன் சார், ஆர் வி உதயகுமார் சார், மன்சூர் அலிகான் சார் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனக்கு இந்த பாசிட்டிவான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மைதீன் மற்றும் தயாரிப்பாளர் மோகனா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது..,
இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முழுமையாக கதையைச் சொன்னார். கதையில் இருந்த ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் அழகாக எடுத்துச் சொன்னார். அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை நான்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் நடிப்பீர்களா ? என ஆச்சரியமாக கேட்டார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது..,
ஆல் பாஸ் படத்தில் அனைத்து கலைஞர்களும் மிக அற்புதமாக உழைத்துள்ளார்கள். வினோதினி எங்கேயும் எப்போதும் நடித்த நடிப்பு அவரை என் மனதில் ஆழமாக இருத்தியது. அதே போல் அனைவருமே இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா. ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி. வாத்தியாராக நடித்த அருவி மதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



















