7 MILES PER SECOND நிறுவனம் தயாரிப்பில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், பாலா சரவணன், லொள்ளுசபா மாறன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வித்தியாசமான காதல் கதை கொண்ட திரைப்படம் மிஸ் யூ. கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தது. குடும்பத்துடன் பார்த்து கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின், 2024 ல் வெளியான சிறந்த 20 திரைப்படங்கள் பட்டியலிலும் இடம் பிடித்தது. காதல், காமெடி, ஆக்ஷன் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் பாடல்களுக்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். N.ராஜசேகரன் இயக்கிய இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது. தற்போது AMAZON PRIME OTT யில் இப்படம் வெளியாகி உள்ளது.
https://youtu.be/oqEsncqQQqA தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் இன்று வெளியானது. 2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மக்கள் செல்வன் விஜய்…
ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் மீண்டும் சினிமாவில் களம் இறங்கி உள்ளனர். ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தை கருணாமூர்த்தி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்தனர். 90-களில் வெளியான பல படங்களின் வெளிநாட்டு உரிமைகள் மற்றும் ஆடியோ உரிமைகளை வாங்கி வெளியிட்டு வந்தனர். கருப்பு ரோஜா, அஜித் நடிப்பில் வெளியான ஏகன், விஜய் நடிப்பில் வெளியான வில்லு, ஆர்யா நடிப்பில் சர்வம், ஜெயம் ரவி…
https://youtu.be/Dcr2Rp2ynJI இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் அழகான டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி…