நடிகர் எஸ்வி சேகர்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
சென்னை மந்தைவெளிப்பாக்கம் கல்யாண் நகர் அசோசியேஷன் தமிழ் புத்தாண்டு சார்பாக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் நாடக நடிகர், சமூக சேவகர் என்று எஸ்வி சேகர் அவர்களைப்பாராட்டி 6700 மேடை நாடகங்கள், 53 முறை ரத்த தானம் , 600 அனாதைப்பிணங்களை அடக்கம் செய்தது, போன்ற நற்செயல்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் என்ற விருது வழங்கப்பட்டது.
பாக்கெட் நாவல் ஜி அசோகன், தம்பி பார்த்தசாரதி, தலைவர் ஶ்ரீனிவாசன் , பொருளாளர் கோதாவரி குமார் முன்னிலையில் விருது வழங்கினார்.
இதனை தொடர்ந்து திரு. S.Ve.சேகர் அவர்களின் “கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற முழு நீள நகைச்சுவை நாடகம் நடைபெற்றது. இலவசமாக அனைவரும் கண்டுகளித்தார்கள்.
T RAGHAVAN