மனிதத்தை முன்னே வைப்போம்! அரசியலை பின்னே வைப்போம்!! இயக்குனர் பேரரசு அறிக்கை…
இன்று சாட்டையடி போராட்டத்தை கிண்டலடிக்கும் பல நூறு வாய்களில் ஒரு வாய் கூட
அண்ணா பல்கலைக்கழகத்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணிற்காக ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத வாய்கள்தான் இவைகள்!
கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவான இந்தப் போராட்டம் இவர்களுக்கு நகைச்சுவையாகவும், கிண்டலாகவும் தெரிகிறது என்றால் இவர்கள் எப்படிப்பட்ட மனநிலையில் வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை?
காம குற்றவாளிக்கு எதிரான போராட்டத்தை கிண்டல் செய்வது அவனவன் அவன் முகத்தில் செருப்பால் அடித்துக் கொள்வதற்கு சமம்!
இதுவே இவர்களின் சகோதரியை ஒருவன் சீரழித்து, சீரழித்தவன் தன் கட்சிகாரனாக இருந்தால் அவனுக்கு இந்த குரல்கள் ஆதரவாக இருக்குமா?
வன்மத்தை கக்கும் வாடகைக்கு கத்தும் இந்த வாய்கள் இப்படி கிண்டலடிக்குமா?
பாலியல் குற்றம் செய்தவன் எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும் அவன் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி!
கட்சிப் பார்த்து கண்டிப்பது மனிதகுணத்துக்கு முரணானது. போராட்டம் எப்படிப்பட்டது என்பது முக்கியமல்ல, எதற்காக இந்த போராட்டம் என்பது தான் முக்கியம்! வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் புகாரளித்த பெண்ணின் FIR எப்படி வெளியே வந்தது?
அந்த ‘ SIR’ யார்?
இதற்கு விடை தெரியும் வரை கேள்விக்குறள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்!
இந்த மாதிரி விவகாரங்களில் உடனே வேட்டியை மடித்துக்கொண்டு செல்லும் சில பத்திரிக்கையாளர்களின் குரல் எங்கே?
திரைப்படத்தில் பெண்களை சிறுமைப்படுத்தினால் உடனே வெகுண்டு எழும் மாதர் சங்கம் எங்கே?
எம் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு என்று கூறும் சில அரசியல் கட்சி தலைவர்களின் குரல் எங்கே?
‘மனிதத்தை முன்னே வைப்போம்! அரசியலிலை பின்னே வைப்போம்’!
—இயக்குனர் பேரரசு
Govind Raj. PRO