குய்கோ திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இயக்குனர் வெற்றி பெறனும், மக்களுக்கு குய்கோ படம் போய்ச்சேரனும் -
நடிகர் விதார்த்
மலையாளப் படங்களைப் போல் திரைக்கதை கொண்டது குய்கோ திரைப்படம் -
நடிகர் இளவரசு
விதார்த்தைக் காக்க வைத்து ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம் - இயக்குனர்
அருள் செழியன்
நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது குய்கோ
எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்,
"மலைக்கிராமத்துக்கான கதை என்றதும், மனதில் ஏற்காடு, ஊட்டி போன்ற விஷுவல் கண் முன் தோன்றும். அவர் லோக்கேஷனை ஃபோட்டோஸாகக் காட்டினார். இந்தக் கதை உருவான இடத்துல ஒரு வருடம் பயணித்து, ஒவ்வொரு சீசனும் எப்படி இருக்கும் எனச் சொன்னார். அழகிய கிராமம் எனச் சொல்வது சுலபம். ஆனா அதைக் காட்சிப்படுத்துவது சவாலா இருக்கும். லோக்கேஷனைப் பார்த்துடலாம் எனக் கேட்டேன். அந்தக் கிராமத்தில் மொத்தம் 40 வீடுதான் இருந்தது. அந்த ஊரில் இறங்கியதும் சிக்னல் கட்டாகிடுச்சு. அந்த ஊர் முழுவதும் பூந்தோட்டமாக இருந்தது. அந்த ஊர்ல பூக்களைப் பயிரிட்டுக் கொண்டிருந்தார்கள். நல்ல பசுமையான லோக்கேஷனாகப் பார்த்து வச்சுட்டு வந்தோம். ஆனா படம் தள்ளிப் போய் மே மாசத்து வெயிலில் ஷூட்டிங் போகும்படி இருந்தது. ‘வேலூரில் மே மாசம் ஷூட்டிங்கா?’ என பயமுறுத்தினாங்க. எல்லோரும் பயமுறுத்தின மாதிரி மலை எங்களை பயமுறுத்தலை. ஆனா மலையில் இருந்து இறங்கிய ரெண்டு நாளும் வெயில் நல்லா காட்டிடுச்சு. ஒரு பாடல் படப்பிடிப்புக்காகப் பார்த்த இடத்தில் வனத்துறையின் அனுமதி இல்லாததால், வேற லோக்கேஷன் பார்த்தோம். அணைக்கட்டு முருகர் கோயில் பக்கத்தில் இருக்கும் மலையில் ஷூட்டிங் போனோம். அதனால் வேலூரை ஸ்விட்சர்லாந்து மாதிரி காட்ட முடிஞ்சது.”
யோகிபாபுவிற்கு ஜோடியாக ஜோடியாக நடித்திருக்கும் துர்கா பேசியதாவது,
"விதார்த் சார் என் காட்ஃபாதர். இதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நானும் இளவரசு சாரும், ஒருநாள் ஷூட்டிங் முடித்துவிட்டு காஃபி குடித்துக் கொண்டே பேசினோம். அவர் பேசினாரு, பேசினாரு, அவ்ளோ ஞானத்தை எங்க ஒளிச்சு வச்சார் எனத் தோணுமளவுக்குப் பேசினார். யோகிபாபு சாரு, நார்மலா நாம எல்லாரும் ஸ்க்ரீன்ல பார்க்கிற மாதிரி தான் இருப்பார். சிரிச்சுட்டே, சிரிக்க வச்சுட்டே இருப்பார்.”
நடிகர் முத்துக்குமார் பேசியதாவது,
நடிகர் இளவரசு பேசியதாவது,
பெண்கள் பொதுவாகத் தன்னை அழகாகக் காண்பிச்சுக்க நினைப்பாங்க. இந்தப் படத்துல, கதாநாயகி ஸ்ரீபிரியங்கா எண்ணெய் ஒழுகும் முகத்தோடு நின்னுட்டிருந்தாங்க. நான் போய், ‘டச் அப் பண்ணிக்கோம்மா’ எனச் சொன்னேன். ‘இல்ல சார், கதைக்கு இப்படித்தான் இருக்கணும்’ எனச் சொன்னாங்க. கன்டினியுட்டி மிஸ் ஆகிடக்கூடாதுன்னு சிச்சுவேஷனுக்கு ஏற்ற முகத்துடன் இருக்கணும் என ஒரு கதாநாயகி படத்தோடு இன்வால்வ் ஆகி நடிச்சது ஆச்சரியமாக இருந்தது.
விதார்த்திற்கு அவரது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை. விமல், விதார்த், விஜய் சேதுபதி ஆகியோர் ஹீரோவின் நண்வர்களாக நடிச்சு இப்போ ஹீரோவாகி இருக்காங்க. விதார்த் சினிமாவுல சாதிச்சது தெரியும். ஆனா அவர் பாரதம் நாடகத்துல, துச்சாதனாக துயில் உறியுற காட்சி நடிச்சுட்டு, ஸ்க்ரீனுக்குப் பின்னாடி போறப்ப அவர் மேல தண்ணி ஊத்தினா, பொஸ்ஸ்ன்னு ஆவி போகும். பொசுக்குன்னு தண்ணி ஊத்தினா ஆவி பறக்கும். ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரமாகவே மாறுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமே இல்லை. அவர் இன்னும் பெரிய உயரத்துக்குப் போகணும். இது ஓட வேண்டிய படம். படத்தை இன்னும் கொஞ்சம் விளம்பரத்தைத் தயாரிப்பு நிறுவனம் அதிகப்படுத்தலாம்.”
நடிகை ஸ்ரீபிரியங்கா பேசியதாவது,
நடிகர் விதார்த் பேசியதாவது,
இசையமைப்பாளர் அந்தோணி தாசன் பேசியதாவது,
இயக்குநர் அருள்செழியன் பேசியதாவது,
இளவரசு அண்ணனிடம் கதை சொன்னேன். அடுத்த நாள் அவர் எனக்கு போன் செய்து, ‘மூன்று மணிக்கு முழிப்பு வந்தது, இந்தக் கதை பற்றித்தான் யோசிச்சிட்டிருந்தேன். ரொம்பப் பிரமாதமாக இருக்கு’ என்றார். 2019 இல் படம் தொடங்கி தாமதம் ஆன பொழுதெல்லாம் மிக உறுதுணையாக இருந்தார். ஆயிரம் சினிமாக்கு பைனான்ஸ் பண்ணவரிடம் கூட்டிட்டுப் போனார். தனிப்பட்ட முறையில் தொடர்ந்து அக்கறையோடு இந்தப் பட உருவாக்கத்திற்கு உதவி பண்ணார்.
வெறொரு படத்திற்காக அந்தோணிதாசன் இசையமைத்த, ‘ஏ! சிரிப்பழகி’ பாட்டை, ‘எனக்கு வேணும்’னு கேட்டு வாங்கினேன். ராஜேஷ் யாதவ் வேகமாக 35 நாளில் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கார். படத்தில் மோசமான கெட்ட பாத்திரங்களே இல்லை. ஏன் போலீஸை மட்டும் கெட்டவங்களா காட்டியிருக்கீங்க என சென்சாரில் கேட்டனர். 35 வருஷமா பத்திரிகையாளரா வேலை பார்த்தேன். நான் பார்த்த விஷயங்களைக் கொஞ்சம் நையாண்டியாக டீல் பண்ணேன் எனச் சொன்னேன்.”
குய்கோ எனும் தலைப்பு, ‘குடியிருந்த கோயில்’ என்பதன் சுருக்கமாகும். திரையரங்குகளில், நவம்பர் 24 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.