தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளார் கௌசிக் கிரிஷ்!
இசை அமைப்பாளர் கௌசிக் கிரிஷ், இசை அமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதியிடம் சவுண்ட் இன்ஜினியராக சேர்ந்து அவரிடம் எப்படி ஒரு படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டார். பின்னர் ‘தனி ஒருவன்’ படத்தில் “கண்ணால கண்ணால” என்ற பாடலை பாடியதன் மூலம் பாடகராகவும் மாறினார். அதனை தொடர்ந்து நிறைய வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார். அதன்பிறகு அருள்நிதி நடித்த டி பிளாக் என்ற படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தற்போது முழுக்க முழுக்க யூடியூப் குழுவினர் நடித்துள்ள ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளதன் மூலம் முழு இசை அமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது ஃபேண்டஸி படம் ஒன்றிற்கு இசை அமைத்து வருகிறார். இப்படி தமிழ் சினிமாவில் பாடகராகவும் இசை அமைப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது இசையமைப்பில் மேலும் நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.