Kalaignar Tv series Ranjithame
இறுதிக்கட்டத்தை நோக்கிய பரபரப்பில் “ரஞ்சிதமே”..!
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “ரஞ்சிதமே” மெகாத்தொடருக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர் தற்போது இறுதி அத்தியாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
விறுவிறுப்பாக நகர்ந்து வரும் தொடரில் தற்போது, வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து அந்த பணத்தை கல்பனாவிடம் கொடுத்து ஏமாறுகிறாள் வித்யா. ஆனால், இதற்கும் ரஞ்சிதா தான் காரணம் என பழி போடுகிறார்கள். மறுபுறம் ரஞ்சிதாவிடம் இருந்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்குகிறான் அருண். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் ரஞ்சிதா, வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
இவ்வாறாக, அடுத்த என்ன நடக்கும் என்கிற பரபரப்போடு தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
இந்த நெடுந்தொடரில், நாயகி ரஞ்சிதாவாக மனிஷாஜித்தும், மாமியாராக ரூபாஸ்ரீயும், நாயகனாக சதீஷூம், முக்கிய கதாபாத்திரங்களில் ஹரிநந்தன், ராம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.