Kalaignar TV New Year 2022 special program
கலைஞர் தொலைக்காட்சியின் ஆங்கில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் மெகாஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அந்த வகையில், ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று காலை 9 மணிக்கு 2021-ஆம் ஆண்டை நினைவு கூறும் விதமாக “திரும்பி பார் – 2021” என்கிற சிறப்பு நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் கலகலப்பான “சிறப்பு பட்டிமன்றமும்”, காலை 11 மணிக்கு “பாகுபலி” இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி இருக்கும் “ஆர்ஆர்ஆர்” படத்தின் சிறப்பு நிகழ்ச்சியும், மதியம் 1.30 மணிக்கு, நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய “ஆனந்தம் விளையாடு வீடு” படக்குழுவினர் குடும்பமாக பங்கேற்கும் சிறப்பு பார்வையும் ஒளிபரப்பாக இருக்கிறது.
மதியம் 2.30 மணிக்கு ஊழலை ஒழிக்கும் அதிரடி முதல்வராக “மெகா ஸ்டார் மம்மூட்டி” அசத்தும் “ஒன்” சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.