Kalaignar TV Driver Jamuna Premiere Movie Press Release and Images
கலைஞர் டிவியில் ஐஸ்வர்யா ராஜேஷின் “டிரைவர் ஜமுனா”
கலைஞர் தொலைக்காட்சியில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற “டிரைவர் ஜமுனா” சூப்பர்ஹிட் த்ரில்லர் திரைப்படம் வருகிற ஞாயிறு பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.
கின்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டும் பெண் கேப் டிரைவராக நடித்திருக்கிறார். திருமணத்திற்கு போவதாகக் கூறி காரில் ஏறும் கூலிப்படையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாயகி, அவர்களிடம் இருந்து தப்பிக்கிறாரா ஆபத்தான இந்த பயணத்தில் நடக்கப்போவது என்ன என்கிற பரபரப்போடு படத்தின் திரைக்கதை விரிகிறது. கோகுல் பினோய் ஒளிப்பதிவையும், ஜிப்ரான் இசையையும் கவனித்திருக்கின்றனர்.