“Jio Cinema and MS Dhoni pad up for an Encore with TATA IPL 2024”

டாடா ஐபிஎல் 2024-உடன் இணைந்து ஜியோ சினிமா & MS தோனி ஒரு கிளாசிக் தருணத்தை உருவாக்கியுள்ளனர் 

~ கேப்டன் கூல் தோனியுடன் இனைந்து ஜியோ சினிமாவின் டாடா ஐபிஎல் 2024 உருவாக்கியுள்ள விளம்பரப் படத்தை தொடர்ந்து, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் கபில் தேவ்  ஆகியோர் முதல் முறையாக ஒன்றாக இடம்பெறும் மற்றொரு அற்புதமான படமும்  வெளியாகியுள்ளது ~

~ படத்தை இந்த இங்கே காணவும் ~

2024 ஐபிஎல் சீசன் துவங்கவுள்ளதை முன்னிட்டு, டாடா ஐபிஎல் (TATA IPL)-இன் பரபரப்பு  காய்ச்சல் எங்கும் பரவத் துவங்கிவிட்டது. ஆக இது மற்றுமொரு அற்புதமான ஐபிஎல்  ஆண்டாக இருக்கப்போகும் நிலையில், ஜியோ சினிமா அதன் விளம்பரப் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது. மொத்தம் மூன்று விளம்பரப் படங்கள் உள்ள இந்த பிரச்சாரத்தின் முதல்  படத்தில் எம்.எஸ்.தோனி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த மூன்று  படங்களுமே டாடா ஐபிஎல் போட்டிகளை ஒன்றாக டிஜிட்டல் தளத்தில் காணப்போகும்  ஒருமித்த ஆவலை பெரிதளவில் தூண்டியுள்ளன. தற்போது, அதிக எண்ணிக்கையிலான  இந்தியர்கள் டிஜிட்டல் தளங்களில் விளையாட்டுப் போட்டிகளை நேரலையில் காண  விரும்புகிறார்கள் என்கிற செய்தியின் அடிப்படையில், இந்த விளம்பரப் படங்கள்  உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த டாடா ஐபிஎல் சீசனின் போது 449 மில்லியன் என்ற  பிரம்மாண்ட பார்வையாளர் எண்ணிக்கையை ஜியோ சினிமா (JioCinema) தொட்டது  குறிப்பிடத்தக்கது.

தி ஸ்கிரிப்ட் ரூம் நிறுவனத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்டு, எர்லி மேன் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த நகைச்சுவையான விளம்பரப் படத்தில் எம்.எஸ்.தோனி – தாத்தா  மற்றும் பேரன் என தனித்துவமான இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படத்தில், டாடா  ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடக்க, அப்போது பேரன் தனது தொலைபேசி திரையில்  எதையோ மூழ்கி பார்த்துக்கொண்டிருப்பதும், பிறகு அது டாடா ஐபிஎல் எனத்  தெரியவருகிறது.அதே நேரத்தில் தாத்தாவும் தனது தொலைபேசியில் அதே போட்டியை ஆர்வத்துடன் பார்ப்பதும் காட்டப்படுகிறது; திடீரென அவருக்கு நெஞ்சுப்பகுதியில் ஏதோ  அசௌகரியம் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மருத்துவ உதவியாளரும் தனது தொலைபேசியில் ஐபிஎல் போட்டியைக் காண்கிறார்.  தாத்தாவும் பேரனும் ஆம்புலன்ஸின் உள்ளே அமர்ந்தபடி தங்கள் செல்போனில் ஐபிஎல்- ஐ காண்பதை தொடர்கிறார்கள். அப்போது தாத்தா ஏப்பம் விட, கதையில் ஒரு திருப்பம்  நிகழ்கிறது. அவருக்கு ஏற்பட்டது வெறும் வாயுப்பிடிப்பு தான் என்பது அனைவருக்கும்  தெரியவருகிறது. அதே நேரம் கிரிக்கெட் போட்டியில் ஒரு சிக்ஸ் பறக்க, மூன்று பேரும்  ஆராவாரத்துடன் கொண்டாட விளம்பரப் படம் முடிகிறது. இந்த படைப்பு டிவி, டிஜிட்டல்  தளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகவுள்ளது.

“நேயர்கள் தினசரி விளையாட்டுப் போட்டிகளை கேபிளில் காண்பதிலிருந்து தற்போது  டிஜிட்டல் தளங்களுக்கு மாறும் போக்கு உள்ளது. சமீபத்திய காலங்களில்  பார்வையாளர்களிடையே நிலவும் இந்த மிகப்பெரிய மாற்றத்தினால் ஈர்க்கப்பட்டே இந்த  விளம்பர படைப்பும் உருவாகப்பட்டுள்ளது.” என்று ஜியோ சினிமாவின் கிரியேட்டிவ்  மார்கெட்டிங் ஹெட், ஷகுன் சேடா அவர்கள் தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், “ சப்  யஹான் அவுர் கஹான்’ (எல்லாரும் இங்க இல்லாம வேற எங்க இருப்பாங்க) என்கிற  கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே எல்லோரும் டாடா ஐபிஎல் போட்டியை  ஜிட்டல் தளத்தில் பார்க்க விரும்புகிறார்கள் என்ற விஷயத்தை இந்த முன்முயற்சி தெரிவிக்கிறது.  மேலும் ஜியோ சினிமா உலகின் இந்த மிகப்பெரிய T20 போட்டித் தொடரை  எந்தவிதமான தடையுமின்றி – அதாவது அணுகல், கட்டணம் மற்றும் மொழி  என எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து வழங்குகிறது. புதுமையான விதத்தில் நாங்கள்  தோனி அவர்களை காண்பிக்க முயற்சி செய்துள்ளோம், அவரைப் பார்க்கும்  ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியுடன் கொண்டும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும்  இந்த படைப்பு அமைந்துள்ளது,” என்றார்.

“ஒரு விளம்பரம் என்பதைத் தாண்டி இது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். பெரிய ஏஜென்சியின் தலைவர்கள் இதனை ஒரு “அற்புதம்” என்றே கூறுவார்கள். ‘சப் யஹான்  அவுர் கஹான்’(எல்லாரும் இங்க இல்லாம வேற எங்க இருப்பாங்க) என்கிற ஒரு  மையக்கருத்தை உருவாக்குவதிலிருந்து, ஜியோ சினிமா குழுவினருடன் நாங்கள்  நெருக்கமாக பணியாற்றினோம். இதற்காக பல்வேறு கதைகளை நாங்கள் எழுதி,  தயாரிப்பு குழுவினரின் எக்கச்சக்க வேலை வைத்தோம்; பின்னர் ஒருவழியாக இறுதி படைப்புகளை உருவாக்கியும் முடித்தோம். இது மிகவும் பரபரப்பான மற்றும் உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்தது”, என்று தி ஸ்கிரிப்ட் ரூமின் நிறுவனர்,  ஐயப்பன் அவர்கள் தெரிவித்தார். “எங்கள் மீது நம்பிக்கை வைத்து, ஒத்துழைப்பு வழங்கிய  ஜியோ சினிமா குழுவினருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இதைவிட  சிறப்பாக யாரும் ஒத்துழைக்க முடியாது. எங்களது படிப்பினை இவ்வளவு புதுமையாக  உருவாக்க அவர்கள் தேவையான ஊக்கத்தை அளித்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.  எங்களது படத்தை காணும் போது சந்தோஷமாக உள்ளது. எல்லாருக்கும் இது எங்களுக்கு பிடிக்குமென உறுதியாக நம்புகிறோம்,” என்றார்.

டாடா ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர், ஜியோ சினிமா-வில் தொடங்கவுள்ளது; அதன்  முதல் போட்டியில் இரண்டு தென்னக அணிகளான MS தோனியின் சென்னை சூப்பர்  கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூவும் வரும் மார்ச் 22, 2024 அன்று  மோதுகின்றன. பார்வையாளர்கள் இந்த ஐபிஎல் சீசனை 12 மொழிகளில் 4K தரத்தில்  இலவசமாகப் பார்க்க முடியும்; முதல் முறையாக ஹரியான்வி மொழியும்  அறிமுகமாவதோடு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோ கேமரா உள்ளிட்ட மல்டி- கேமராவில் பார்க்கும் வாய்ப்பு, ‘ஜீத்தோ தன் தனா தன்’ உட்பட ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைக்கும் பல அம்சங்களையும் ஜியோ சினிமா இந்த சீசனில் வழங்கவுள்ளது.

ஜியோ சினிமா (JioCinema) ( iOS & Android) செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம்  நேயர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளை தொடர்ந்து பார்க்கலாம்.  சமீபத்திய அப்டேட்கள், செய்திகள், ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ரசிகர்கள்  ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் ஜியோ  சினிமாவைப் பின்தொடரலாம். மேலும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர்,  மற்றும் யூடியூப் ஆகியவற்றில் ஸ்போர்ட்ஸ்18 (Sports18)-ஐ பின்தொடரலாம்.