*Jaya tv program Vaalu Pasanga write up and Images*

“வாலு பசங்க”

ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் மாலை 5:00 மணிக்கு “வாலு பசங்க” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 4 வயது முதல் 8 வயது வரையுள்ள சுட்டிக்குழந்தைகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வண்ணமயமாக்குகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை சுட்டிக்குழந்தைகளின் விருப்பமான பொம்மை “ கலர் மச்சான் “ என்ற கதாபாத்திரம் தொகுத்து வழங்குகிறது. கலர் மச்சானோடு சேர்ந்து குழந்தைகளின் படிப்புசார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி அவர்களது கூடுதல் திறமைகள் மற்றும் அவர்களின் சுட்டிதானத்தை வெளிகொண்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. குழந்தைகள் அவர்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய உடலும் உள்ளமும் சுறுசுறுப்பாக இருக்கும் வகையில் வித்தியாசமான விளையாட்டு நிகழ்ச்சிகள் பகுதியும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.

இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிகள் வழங்கப்படுகிறது.ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களை கட்டும் இந்த நிகழ்ச்சியை வென்ட்ரிலோக்விசம் மூலமாக கிருஷ்ணா தொகுத்து வழங்குகிறார்.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சியாக அமைந்ததுதான் இந்த “வாலு பசங்க” நிகழ்ச்சி.