*JAYA TV PROGRAM MARGAZHI UTSAVAM 2022 *

ஜெயா டிவி வழங்கும் மார்கழி உத்சவம் 2022

23ம் ஆண்டு கர்நாடக சங்கீத விழா

தமிழ் மாதங்களில் மார்கழி மாதத்திற்கு ஒரு தனிசிறப்பு உண்டு. நாள்தோறும் சைவ மற்றும் வைணவ ஆலயங்களில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் பாடப்படும். இசை உத்சவங்களும் இம்மாதத்தில் நடைபெறும்.

இச்சிறப்பான மார்கழி மாதத்தில் ஜெயா டிவி கடந்த 22 ஆண்டுகளாக ‘மார்கழி உத்சவம்’ என்ற கர்நாடக சங்கீத விழாவை வெகு சிறப்பாக ஒளிபரப்பி வருகிறது. இந்த ஆண்டும் ஜெயா டிவி டிசம்பர் 16ம் தேதி, ஜனவரி 14 வரை மார்கழி உத்சவம் என்ற இசை விழாவை ஒளிபரப்ப இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொருள் (theme) குறித்து ஜெயா டிவியின் மார்கழி உத்சவத்தில் கச்சேரிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ‘ராக வைபவம்’ என்ற பொருளில் கலைஞர்கள் இசைக்கவிருக்கிறார்கள். ஒரு பாடகர் அல்லது இசைக்கருவி வாசிப்பவர்களின் ஒரு கச்சேரி முழுவதும் ஒரே ராகத்தில் இடம்பெறும்.

ஒவ்வொரு இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும் அன்று இடம்பெறபோகும் ராகத்தின் கட்டமைப்பு மற்றும் சிறப்புகள் குறித்து பாடகி சுசித்ரா பாலசுப்ரமணியம் நேயர்களுக்கு விளக்குவார்.

பைரவி, கல்யாணி, தோடி, சக்ரவாகம், சங்கராபரணம், கமாஸ், பெஹாக், ஆபேரி, ஹம்ஸாநந்தி, மோகனம், சிம்மேந்திரமத்யமம், வசந்தா, முகாரி, ஸ்ரீரஞ்சனி, நாசிகாபூஷணி போன்ற பல ராகங்களாஇ இசைக்கலைஞர்கள் இசைக்கவிருக்கிறார்கள்.

இந்த சுவாரஸ்யமான இசைக்கச்சேரிகளை மஹதி, சஷாங்க் சுப்ரமணியம் (புல்லாங்குழல்), நெய்வேலி சந்தானகோபாலன், சின்மயா சகோதரிகள், ஓ.எஸ்.அருண், டி.என்.எஸ்.கிருஷ்ணா, மாண்டலின் யூ.ராஜேஷ், பி.கண்ணன் (வீணை), ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா சகோதரிகள், ஜே.பி.கீர்த்தனா ஸ்ரீராம் உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் வழங்கவிருக்கிறார்கள்.

இவைதவிர, ‘ஹரிகதா’ என்று அழைக்கப்படும் சங்கீத உபன்யாசங்களும் மார்கழி உத்சவத்தில் இடம்பெறும். இதனை விசாகா ஹரி மற்றும் உ.வே.துஷ்யந்த் ஸ்ரீதர் வழங்கவிருக்கிறார்கள்.

மார்கழி உத்சவம் நிகழ்ச்சி டிசம்பர் 16 முதல் ஜனவரி 14 வரை தினமும் காலை 7:30 மணிமுதல், 9:00 மணிவரை ஒளிபரப்பாகும். இதன் மறுஒளிபரப்பு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிமுதல் 10:00 மணிவரை ஒளிபரப்பாகும். சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 9.30 மணிமுதல் 11:00 மணிவரை ஒளிபரப்பாகும் மார்கழி உத்சவம் நேயர்களுக்கு ஒரு இசை விருந்தாக அமையும்.