Jaya Tv Pongal Special Programmes
ஜெயா தொலைக்காட்சியின் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவியில் பொங்கல் தினத்தன்று காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஃபில்மி ஃபன் (Filmy Fun).
இந்நிகழ்ச்சியில் ஜெயா மேக்ஸ் தொகுப்பாளர்கள் இரு அணிகளாக பிரிந்து சினிமா தொடர்பான கேள்விகள் நிறைந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள் சுவாரஸ்யமான போட்டிகளில் இரு அணியினர்களும் ஆர்வத்துடன் பங்கு கொள்கின்றனர் விறுவிறுப்பான இப்போட்டிகள் நடுவே தொகுப்பாளர்களின் நகைச்சுவையும், ஆட்டமும் பாட்டமும் இடம்பெறுகிறது. இறுதியில் அதிக போட்டியில் வென்ற அணியே வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் கார்த்திக் ராமதுரை தொகுத்து வழங்க, தொகுப்பாளர்கள் இளவேனில், ரித்தி, ரபிக், ரம்யா ஆகியோர் ஒரு அணியாகவும், அருண், ஹரி, சந்தியா,ரத்னா ஆகியோர் மற்றொரு அணியாகவும் பிரிந்து விளையாடுகின்றனர்.இந்நிகழ்ச்சியை உங்கள் ஜெயா டிவியில் பொங்கல் தினத்தன்று காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
“நாங்க வேற மாதிரி”
ஜெயா டிவியில் பொங்கல் தினத்தன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது “நாங்க வேற மாதிரி” நிகழ்ச்சி.
பிரபல ஆர்.ஜே மற்றும் வி.ஜேக்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் அவர்களின் கலாட்டாக்களும் சுவாரசியமான நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. தொகுப்பாளர்கள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமான பல போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியை தொகுப்பாளர் கமல் தொகுத்து வழங்க ஆர் ஜே அணியில் அண்ணாமலை ,ஜோ, ஐஸ்வர்யா ஆகியோரும், வி ஜே அணியில் அசார் ,விட்டல், தாப்பா ஆகியோர் கலந்து கொள்கின்றனர் அசார் விட்டல் தாபா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்
ஜெயா டிவியில் வரும் பொங்கல் நாளன்று பிரபல பேச்சாளர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
வாழ்க்கைக்கு மகிழ்ச்சிதருவது நேற்றைய நினைவுகளா, இன்றைய கனவுகளா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்.
நேற்றைய நினைவுகளே வாழ்க்கைக்கு மகிழ்ச்சிதருவதாக திரு.ரவிக்குமார், திரு.உமாசங்கர், திருமதி.அட்சயா ஆகியோர் வாதிடுகின்றனர். வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை தருவது நாளைய கனவுகளே என்று திருமதி.மலர்விழி, திரு.தாமல் சரவணன், திரு.நாராயண கோவிந்தன் ஆகியோர் பங்கேற்று ஆணித்தரமாக தங்கள் எதிர்வாதங்களை எடுத்துவைக்கின்றனர்.
பட்டிமன்றத்தின் நிறைவுப்பகுதியில் இரு தரப்பு வாதங்களை சீர்தூக்கி, பகுப்பாய்ந்து அற்புதமான தீர்ப்பை நிகழ்ச்சியின் நடுவர் மணிகண்டன் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சி பொங்கல் நாளான ஜனவரி 14ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
“டிஜிட்டல் தேவதைகள்”
ஜெயா டிவியில் மாட்டு பொங்கல் தினத்தன்று காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது “டிஜிட்டல் தேவதைகள்” நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் சோசியல் மீடியாவில் பிரபலமாகி வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகைகளான கிரேஸ் தங்கவேல், டோலி ஐஸ்வர்யா, சப்னா ஐயர், ஷ்ரவநிதா ஆகியோர் பங்கேற்றனர்.தொகுப்பாளர் கமல் தொகுத்து வழங்குகிறார். தொகுப்பாளரின் சுவாரசியமான கேள்விகளுக்கு கலகலப்பான முறையில் பதில் அளிக்கின்றனர்.
இதில் நடிகைகளின் கண்கவர் நடன காட்சிகளும் காமெடி கேங்ஸ்டர் கலைஞர்களின் நகைச்சுவையும் இடம்பெறுகின்றன. நடிகைகள் தங்கள் மீது ரசிகர்கள் வைத்துள்ள காதலுக்கு தங்களின் அன்பையும் இனிமையாக வெளிப்படுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியை உங்கள் ஜெயா டிவியில் மாட்டு பொங்கல் தினத்தன்று காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.